அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் என்பது அரசியல் வியாபாரிகளின் சூழ்ச்சி என்கிறார்
முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைவருக்கும் எதிராக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் நாளை (26) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கட்சியின் சிரேஷ்ட போராளிகள் என்ற பெயரில் அனாமேதய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதில் எந்தவித உண்மையும் இல்லை இதனை கட்சிப் போராளிகளும் பொதுமக்களும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை இது ஒரு சில அரசியல் வியாபாரிகளின் செயல் என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் குழுவின் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறகத்துல்லாஹ் தெரிவித்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
ஆள் அடையாளத்தை வெளிப்படுத்தாத கோளைத்தனமான சில விஷமிகள் கட்சித் தலைமைக்கு எதிராக நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரி அம்பாறை மாவட்ட மக்களை கட்சிக்கு எதிராக திசை திருப்ப முற்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்களை இச்சதிகாரர்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க முயற்சிப்பதற்கான முதல் நாடகமே இக்ஹர்த்தால் நாடமாகும்.
உண்மையில் இது மக்களை பிழையாக வழி நடாத்தி அதன் மூலம் அரசியல் வளர்ச்சி காண நப்பாசைப்படும் அரசியல் வாதிகளின் செயற்பாடாகும்.
முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான கருத்துக்களை உடையவர்கள் மக்கள் மன்றத்தில் நேருக்கு நேராக நின்று விவாதிப்பதன் மூலம் தங்களின் கொள்கை விளக்கத்தை மேற்கொண்டு அவர்களின் அரசியல் உயர்ச்சி பற்றி சிந்திக்காமல் முஸ்லிம் காங்கிரஸை விமர்சிக்கும் செயலாளது கண்டிக்கத்தக்க விடமாகும்.
இவ்வாறான திருட்டுப் புத்திகளைக் கையாண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு சேர்க்க நினைக்கும் அரசியல் அதிகார வெறியர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டக் காத்திருக்கிறார்கள் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கின்;றேன்.
மேலும் இந்த ஹர்த்தால் நடவடிக்கையினை பயன்படுத்தி சிலர் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்கு இதில் தொடர்புள்ளது என்ற வதந்தியையும் பரப்பி விட்டுள்ளனர். இதன் மூலம் இவர்களை கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கு எதிரானவர்கள் எனக்காட்டி கட்சியிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் தூரப்படுத்துவதற்கும் முயற்சிக்கின்றனர். இது அவர்களின் பகற்கனவாகும். இதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்துள்ளனர் என்பதை இந்த அரசியல் வியாபாரிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே அம்பாறை மாவட்ட கட்சிப் போராளிகளும், மக்களும் என்றும் கட்சியோடும், கட்சித் தலைமையோடும் இருக்கின்றார்கள் என்பதை இந்த அனாமேதய ஹர்த்தால் அழைப்பினை நாளை நிராகரிப்பதன் மூலம் இந்த சதிகாரர்களுக்கு உணர்த்துவோம் ஒன்றிணைவோம் எனவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment