கல்முனை இராசையா ஸ்ரீவேல்ராஜா தமிழ்இசிங்கள மொழி பெயர்ப்பாளராக சத்திய பிரமாணம்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனை வட்டவிதானை வீதியைச் சேர்ந்த இராசையா ஸ்ரீவேல்ராஜா நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட தமிழ்இசிங்கள மொழி பெயர்ப்பாளர் போட்டிப்பரிட்சையில் சித்தி பெற்று தமிழ்இசிங்கள மொழி பெயர்ப்பாளராக கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.எச்.முகைதீன் முன்னிலையில் அண்மையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் வாழசை;சேனை,மற்றும்; மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியலயங்களின் பழைய மாணவராவார். சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் தமிழ்,சிங்கள ஊடகங்களில் கல்முனை பிராந்திய ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
மேலும் மக்கள் வங்கியில் உதவி பாதுகாப்பு அத்தியட்சகராகவும் தொழில் புரிகின்றார்.கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட அங்கத்தவராகவும் செயற்படும் இவர் கல்முனை தொகுதி இந்து மாமன்ற செயலாளராகவும்,பல அமைப்புக்களில் அங்கத்தவராகவும் இணைந்து சமூக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment