கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்ட மக்களின் அவலநிலை கண்டு கவலையடைகின்றேன். - ஹரீஸ் எம்.பி அனுதாபம்
பதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு 'நாம் இலங்கையர்கள்' என்று இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் உதவுமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவானது எமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப் பின்னரான இரண்டாவது பேரழிவாகும். இதில் ஒரு கிராமமே அழிவுற்றுள்ளதுடன் பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனையிட்டு அம்மக்களை என்னி நான் கவலையடைகின்றேன். இம்மண்சரிவில் உயிர்களை இழந்து தவிர்க்கும் குடும்பங்களுக்கும், தாய், தகப்பனை இழந்து தவிர்க்கும் சிறார்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ...