Posts

கல்வியற்கல்லூரி மாணவ ஆசிரியர்கள் தொற்று நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் அறிவிக்குமாறு கோருகிறார் யாழ் கல்வியற்கல்லூரி பீடாதிபதி

Image
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிரியில்  கல்வி கற்கும் மாணவ ஆசிரியர்கள்  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால்  தெரியப்படுத்துமாறு கோருகிறார்  யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்  தோற்று நோய்  காரணமாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிரியில்  கல்வி கற்கும் மாணவ ஆசிரியர்கள்,அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களது பாடநெறிப் பொறுப்பு விரிவுரையாளர்களூடாகவோ அல்லது ஏனைய   விரிவுரையாளர்களினூடாகவோ  அல்லது நேரடியாகவோ என்னுடன் தொடர்பு கொள்ளு மாறு  யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம்  அறிவித்துள்ளார். மேலும்  உங்களது சக மாணவர்கள்  அல்லது அவர்களின் குடும்பம்  பாதிப்புக்குள்ளாகி இருந்தால்  அது தொடர்பாகவும் ஏனைய  மாணவ ஆசிரியர்களும் தகவலை வழங்கலாமென பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம் அறிவித்தல் விடுத்துள்ளார்  

நற்பிட்டிமுனை விவசாயிகளின் விடயத்தில் சவளக்கடை கமநல சேவை மத்திய நிலையம் அசமந்தப்போக்கு

Image
நற்பிட்டிமுனை கிராம விவசாயிகளுக்கு தங்களின் வயல் வேலைகளுக்கு செல்ல தடை போடப் படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஊரடங்கு காலத்திலும் விவசாயிகள் தங்கள் கடமைகளை செய்வதற்கு தடையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் நற்பிட்டிமுனை விவசாயிகளுக்கு  அது சாத்தியமற்று போகின்றது நற்பிட்டிமுனை கிராமமும் விவசாயிகளும் கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் காணப்படுகின்றது அவர்களது நெற்செய்கை காணி சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குள் அமையப் பெற்றுள்ளது. சவளக்கடை பொலிஸாரின் அனுமதியை பெற வேண்டுமெனில் அங்குள்ள கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் கல்முனை பிரிவுக்குட்பட்டவருக்கு  நாவிதன் வெளி கிராம சேவகர் அனுமதி வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாட்ட நிலையில் உள்ளனர் இந்த நிலை நீடித்தால் விதைப்பு காலம் நீடிக்கலாமெனவும் சில வேளை நெற்செய்கை கைவிடப்படும் நிலை உருவாகும் எனவும் விவயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கல்முனையையும் நாவிதன்வெளியையும் பிரிக்கும் கிடங்கி பாலத்துக்கப்பால் செய்வதற்கு பாதுகாப்பு படையினரின் அனுமதி பெறவேண்டியுள்ளது . இந்த அனுமதியை சவளக்கடை  கமநலகேந்

இதுவரை கொரோனா பாதிப்பு 1,015,709 - பலி 53,069 பேர்!

Image
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 1,015,709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53,069 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 211,409 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 7 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 37 ஆயிரத்து 646 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

Image
பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிப்பு

Image
இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் நேற்றையதினம் உயிரிழந்த நபரின் அருகில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 21 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

1933- கொரோனா பரவல் முறைப்பாட்டுக்கு மேலதிக இலக்கம்

Image
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள், பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள 1933 எனும் புதிய தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 1933 எனும் குறித்த தொலைபேசி இலக்கம் வழியாக, முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதோடு, 119 அவசர தொலைபேசி சேவைக்கும் இம்முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நாட்களில் 119 இலக்கத்திற்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலான முறைப்பாடு தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 119 அவசர அழைப்பு மத்தியநிலையத்திற்கு கிடைக்கும் அழைப்புகளால் ஏற்படும் அழைப்பு நெரிசலை தடுக்கும் நோக்கில் அவ்விலக்கத்திற்கு ஒரே நேரத்தில் கிடைக்கும் அழைப்பு எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொரோனா பன்மடங்கு பெருகுகிறது - WHO எச்சரிக்கை!

Image
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 937,567 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47,256 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 194,311 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் விகிதமும், உயிரிழப்பும் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் பேசியதாவது:- ´´கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 4 வது மாதத்திற்குள் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், வைரஸ் அதி தீவிரமாக உலகம் முழுவதும் பரவும் நிலையால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். கடந்த சில வாரங்களாக கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதை நாம் உணர்கிறோம். வைரஸால் உயிரிழந்

எச்சரிக்கை - கொரோனா வைரஸ் பாதிப்பு 10 இலட்சத்தை எட்டும்

Image
ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 இலட்சத்தை எட்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை காலை 10 மணி வரை 937,170 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும். நாடு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அமெரிக்கா 215,417 இத்தாலி 110,574 ஸ்பெயின் 104,118 சீனா 82,381 ஜெர்மனி 77,981 பிரான்ஸ் 57,763 ஈரான் 47,593 பிரிட்டன் 29,865 சுவிட்ஸர்லாந்து 17,768 துருக்கி 15,679.

மர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி

Image
கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரது மகன் பயாஸ் இத்தகவலை கூறினார். 10 க்கும் மேற்படாதவர்களுடன் இன்று வியாழக்கிழமை, 2 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வரும்படி அவரிடம் கோரப்பட்டுள்ளது. இதையடுத்தே ஜனாசா குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை அவரது குடும்பத்தினர் புதன்கிழமை இரவு பொலிஸ் பாதுகாப்புடன் மற்றுமொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பயாஸ் கூறினார்.

உழவு இயந்திரம் பனையில் மோதி 22 வயது வாலிபன் மரணம்

Image
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில்  நேற்று  (01) பிற்பகல் 4.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகாமையில் பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பு, வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (22) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மருதமுனையில் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க நடவடிக்கை

Image
மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஊடக இரண்டாயிரம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளாந்தம் தொழில்செய்யும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தை மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா சபை, பொது அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர். பல்வேறு தாப்பினர் ஊடாகவும் சேகரிக்கப்பட்ட நிதிகள், பொருட்கள் தற்போது அனர்த்த மத்திய நிலையமாக செயற்படும் மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் பயனாளிகளுக்கான உலர் உணவு பொதிகள் பிரதேச செயலகம், பொலிஸார், மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளன என அனர்த்த மத்திய நிலையத்தின் செயலாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன் தெரிவித்துள்ளார்.

மேலும் 10 பேருக்கு கொரோனா - கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!

Image
இலங்கையில் மேலும்10 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 142 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், 124 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 20 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 195 பேர் கைது

Image
இன்று மாத்திரம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 110 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனங்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க படமாட்டாது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயாவில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - மீறினால் ஊருக்கு சீல்!

Image
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவலை பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று (31) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 12 தொடக்கம் 15 திகதி வரை டிக்கோயா தரவலை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தேவ ஆராதனை தொடர்ந்து கடந்த 29 திகதி முதல் அவ் ஆலயத்தின் போதகர் உட்பட 09 பேர் ஏப்ரல் 02 திகதி வரை தனிமை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது மேலும் சிலர் யாழ்ப்பாணம் தேவ ஆராதனையின் போது கலந்து கொண்டுள்ளதாக உறுதி செய்யப்படுத்தப்பட்டதை அடுத்து டிக்கோயா ஆராதனையிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உலர் உணவு பெற்றுக்கொண்ட குடும்பங்களும் ஆராதனையில் கலந்து கொண்ட 65 குடும்பங்கள் உட்பட கொழும்பு அவதான பகுதியிலிருந்து வருகை தந்த குடும்பங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன. இவர்கள் தனிமைப்படுத்தும் விதிகளை மீறும் பட்சத்தில் இத்தோட்டத்திற்கு சீல் வைக்க நேரிடும் என அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கிசான் பிரேமசிறி தெரிவித்தார். இதே வே

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது

Image
எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் சில பிரதேசங்களில் நேற்று (30) தளர்த்தப்பட்டு மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. விசேடமாக இவ் ஊரடங்குச் சட்டம் தொற்றுநோயைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். குறித்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்திய தினத்திலிருந்து இதுவரை சட்டத்தை மீறியவர்கள் 7000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 1700 வாகனங்கள் பொலிசார் கையகப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டதுடன், ஆனாலும் தற்போது பொலிஸ் பிணை வழங்கப்படு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு

Image
இன்று (31) பிற்பகல் 4.15 மணிக்கு இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 132 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், 114 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்!

Image
கொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Image
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!

Image
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 5 பேர் சிலாபத்தை சேர்ந்த ஒரே குடும்பைத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர்களில் 4 மாத வயதுடைய கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார் இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது. அதன்படி, 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது , அங்கொடை ஐடிஎச், வெலிகந்த மற்றும் மின்னேரியா ஆகிய வைத்தியசாலைகளில் 107 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

Image
8 மணி நேரத் தூக்கம் நம் இரவுத் தூக்கம் பாதிக்கப்படக் கூடாது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம். வீட்டிலிருக்கும் நாள்கள் தானே என்று இரவு தாமதமாகத் தூங்குவது, காலையில் தாமதாக எழுவது இரண்டையும் தவிர்க்க வேண்டும். மனிதன் ஆழ்ந்து உறங்கும்போதுதான் உடலில் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் சைட்டோகின்ஸ் என்ற புரதச்சத்து உற்பத்தியாகும். இரவு நேரத்தில் எளிய உணவுகள், தூங்குவதற்கு முன்பாக கேட்ஜெட் பயன்பாடுகளைத் தவிர்த்தல் ஆகியவை நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும். நீர்ச்சத்துள்ள உணவுகள் தண்ணீரையே குடித்துக்கொண்டிருக்காமல் சமைத்த சோற்றிலிலிருந்து வடித்த கஞ்சித் தண்ணீர், பழைய சாதத்தில் ஊற்றி வைத்த தண்ணீர், நீர் மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பழச்சாறு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை வெட்டி அப்படியே சாப்பிட வேண்டும். குழந்தைகள் பழங்களை விரும்பிச் சாப்பிடவில்லையென்றால் தேன் கலந்து கொடுக்கலாம். உடல் இயக்கம் மிகவும் குறைந்துவிடும் என்பதால் சோறு, இட்லி, தோசை போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை மிகவும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு பிற்பகல் 2.00க்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம்

Image
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொண்டனர். எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. அநேகமான பிரதேசத்தில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து நகரங்களில் நடந்து கொண்டமை காணக் கூடியதாய் இருந்தது. எவ்வாறாயினும் சில பிரதேசங்களில் பொது மக்களின் நடவடிக்கைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு எதிராக இருந்தமையை காணக்கூடியதாக

மேலும் இரண்டு பேருக்கு கொரோனா - 3 பேர் பூரண குணம்!

Image
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் இரண்டு பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 122 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது. அதன்படி, 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது , அங்கொடை ஐடிஎச், வெலிகந்த மற்றும் மின்னேரியா ஆகிய வைத்தியசாலைகளில் 107 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு நீக்கம் கல்முனை நகர் முடக்கம்

Image
ஊரடங்கை நீக்கினாலும் தொடர்ந்தும் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி அரசு முன்னெடுக்கும் கொரனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போம்  கடந்த மூன்று தினங்களாக அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம்  இன்று  திங்கட் கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட போதிலும் மக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்முனை கொரனா செயலணியின் தீர்மானத்துக்கமைய கல்முனை வர்த்தக நிலையங்கள் , பொதுச்சந்தை என்பன திறக்கப்படவில்லை. சுகாரார திணைக்கள அதிகாரிகள் , கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , இராணுவ அதிகாரி, பிரதேச செயலாளர்கள் , வர்த்தக சங்க பிரதிநிதிகள் அடங்கலாக கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான கல்முனை கொரனா செயலணி எடுத்த முடிவின் பிரகாரம் இன்று   ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் வர்த்தக நிலையங்கள் , பொதுச்சந்தை என்பவற்றை தொடர்ந்தும் மூடியதனால் பெருந்தொகை மக்கள் பாதுகாப்பற்ற முறையில் ஒன்று கூடுவதை தவிர்க்க முடிந்துள்ளது. பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடரந்தும் மூடப்பட்டிருந்த போதிலும் அரச தனியார் வங்கிகள் , சதோச ,பூட் சிற்றி விற்பனை நிலையங்கள் த

ஹட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Image
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று (28) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனை கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப்பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, " தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11 ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹட்டனுக்கு அழைத்து வந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். அதன்பின்னர் திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு 16, 17 ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளை பக

கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக அதிகரிப்பு

Image
கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போன்று பரவி வருவதால் பலியோனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரழந்தோரின் எண்ணிக்கையும் அஞ்சப்படும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று மதியம் நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,060 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேரும், ஸ்பெயினில் 6,528 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 785 பேர் குணமடைந்துள்ளனர்.