இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு
இன்று (31) பிற்பகல் 4.15 மணிக்கு இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல், 114 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment