ஊரடங்கு நீக்கம் கல்முனை நகர் முடக்கம்
ஊரடங்கை நீக்கினாலும் தொடர்ந்தும் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி அரசு முன்னெடுக்கும் கொரனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போம்
கடந்த மூன்று தினங்களாக அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று திங்கட் கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட போதிலும் மக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்முனை கொரனா செயலணியின் தீர்மானத்துக்கமைய கல்முனை வர்த்தக நிலையங்கள் , பொதுச்சந்தை என்பன திறக்கப்படவில்லை.
சுகாரார திணைக்கள அதிகாரிகள் , கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , இராணுவ அதிகாரி, பிரதேச செயலாளர்கள் , வர்த்தக சங்க பிரதிநிதிகள் அடங்கலாக கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான கல்முனை கொரனா செயலணி எடுத்த முடிவின் பிரகாரம் இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் வர்த்தக நிலையங்கள் , பொதுச்சந்தை என்பவற்றை தொடர்ந்தும் மூடியதனால் பெருந்தொகை மக்கள் பாதுகாப்பற்ற முறையில் ஒன்று கூடுவதை தவிர்க்க முடிந்துள்ளது.
பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடரந்தும் மூடப்பட்டிருந்த போதிலும் அரச தனியார் வங்கிகள் , சதோச ,பூட் சிற்றி விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் மற்றும் வர்த்தகர்கள் கல்முனை பிரதேசமெங்கும் பரந்துபட்ட வர்த்தக நடவக்கையில் ஈடுபட்டதன் காரணமாக மக்கள் ஒன்று கூடுவது பெரும்பாலன இடங்களில் தவிர்க்கப்பட்டிருந்தது.
Comments
Post a Comment