மர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி
கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரது மகன் பயாஸ் இத்தகவலை கூறினார்.
10 க்கும் மேற்படாதவர்களுடன் இன்று வியாழக்கிழமை, 2 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வரும்படி அவரிடம் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்தே ஜனாசா குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை அவரது குடும்பத்தினர் புதன்கிழமை இரவு பொலிஸ் பாதுகாப்புடன் மற்றுமொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பயாஸ் கூறினார்.
Comments
Post a Comment