Posts

தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் கட்சியின் தலைவரான ஜனாதிபதியிடம்

Image
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்றல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் முழு அதிகாரம்கட்சியின் தலைவரான   ஜனாதிபதி  மைத்திரிபாலவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் புதிய செயலாளராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது மத்திய குழுக் கூட்டம் இதுவாகும்.  அத்துடன் இந்தக் கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மத்திய குழு உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். தேசிய அரசாங்கம் அமைத்தல், அதில் பெற்றுக்கொள்ள வேண்டிய அமைச்சுப் பொறுப்புகள், அவை வழங்கப்பட வேண்டிய நபர்கள், என்பன குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்தும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சுதந்திரக் கட்சி மத்திய குழுவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொள்வதற்கும் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளின்றி அல்லல் படும் மக்கள் வாழும்; “நளீர் புரம்"

Image
-பி.எம்.எம்.ஏ.காதர்- ஆழிப்பேரலை அனர்த்தத்தில்   உயிர்களையும், உடமைகளையும்  இழந்த மக்கள் குடியேறி வாழும் மிகவும் பின்தங்கியிருக்கும்  ஒரு கிராமத்தைப் பற்றிச் சொல்வது  பொருத்தமாகும். 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி  ஏற்பட்ட ஆழிப்பேரலையில்  ஆயிரக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட சொத்துக்களையும் இழந்தது வரலாறாகும்.  இந்த வரலாறு  காலம் காலமாக மறக்கமுடியாத வடுக்களாக மாறாதிருக்கும்.  உயிர்களையும் உடமைகளையும் ஆழிப்பேரலை அள்ளிச் சென்ற அகோரக் காட்சிகளைக் கண்ட மனித நேயமிக்க யாரும் மனம் உருகாதிருக்க மாட்டார்கள். அந்த மனவேதனை இன்று வரை மனங்களில் இருந்து  மாறவில்லை. அந்த மாறாத மனநிலையுடன் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழும் கிராமமே “நளீர் புரம்”என்று சொல்லப்படுகின்றது.  கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தேர்தல் தொகுதியில் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை மாநகர சபைக்குள்ளான மருதமுனைக் கிராமத்தை அண்டிய மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் கிராமமே இது.  ஆழிப்பேரலையால் முற்றாகப் பாதிக்கப்பட்ட மக்களே இங்கு குடியேறி  இர

பாண்டிருப்பில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் வரங்கள் நல்கிடும் வரலட்சுமி பூசை

Image
இந்துப் பெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது.  எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்குகொள்வர் என்றாலும் திருமணமான பெண்கள் இந்த விரதத்தை தங்கள் மாங்கல்யம் கெட்டியாக இருக்கவும், வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்கவும் அதிகம் மேற்கொள்வர்.   அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் வரங்கள் நல்கிடும் வரலட்சுமி பூசை இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடை பெற்றது. கல்முனை பிரதேசத்தில் பிரதான வழிபாடுகள் பஞ்ச பாண்டவர்களின் பதியாக விளங்கும் பாண்டிருப்பில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில்  ஆலய குரு சிவஸ்ரீ மு.கு.சபாரெத்தினம் குருக்கள் தலைமையில்  இடம் பெற்றன .  அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலட்சுமியின் அம்சங்களை நிறுத்தி  வரலட்சுமி விரதம் மேற்கொண்டு  தம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது இந்துக்களின் ஐதீக

அமானா வங்கியின் தானியங்கி பணம் வழங்கும்ATM இயந்திரம் பெரிய நீலாவணையில் திறந்த வைக்கப்பட்டது.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) அமானா வங்கியின் தானியங்கி பணம் வழங்கும்ATM இயந்திரம் நேற்று செவ்வாய்க்கிழமை (25-08-2015 பெரிய நீலாவணை பிராதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில்  திறந்து வைக்கப்பட்டது. இங்கு அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முகம்மட் அஸ்மீர் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமானா வங்கியின் பிரதித் தலைவர்களான எஸ்.குவாசித்,சித்தீக் அக்பர்,அலிவாஹிட் ஆகியோருடன் கல்முனை அமானா வங்கிக் கிளையின் முகாமையாளர் முகம்மது சமீம்,வாடிக்கையாளர் உறவு  முகாமையாளர் எம்.எம்.முகம்மது ஆசிப் ஆகியோருடன் வங்கி உத்தியோத்தர்களும்,வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். 

களவாடிய கள்வன் கடித்தும் அவனை மடக்கிப் பிடித்து கட்டிவைத்த தைரியப் பெண்

Image
களவாட வந்த கள்வன் ஒருவனை  வீட்டுக்குள் வைத்து  பிடித்து அவனுடன் சண்டை செய்து அவனிடமிருந்து கடியும் வாங்கி  அவனை  கட்டிவைத்து  பொலிசாரிடம் ஒரு பெண் ஒப்படைத்துள்ளார் . இந்த சம்பவம் இன்று புதன் கிழமை அதிகாலை 3.00 மணிக்கு  கல்முனைக் குடி கடற்கரைப் பள்ளி  வீதியில்  வீடொன்றில் இடம் பெற்றுள்ளது . சம்பவம் தொடர்பாக வீட்டுரிமயாளரான  குறித்த பெண் விபரிக்கயில்  நான் தூங்கிக் கொண்டிருக்கும் சமயம்  ஒரு சத்தம்  கேட்டது  அப்போது கண்விழித்தேன்  என் முன்னால்  ஒருவர் நடமாடுவது தெரிந்தது . அவர்  அங்கும் இங்கும்  நடமாடி  ஏதோ தேடிக் கொண்டிருந்தார் . நான்  நினைத்தேன்  தனது பிள்ளைகள் நித்திரையில் இருந்து எழும்பி ஏதும் தேடுகின்றார்கள்  என்று. பின்னர் எனக்கு  இவர் கள்வர்தான் என்பதை  உணர முடிந்தது . எனக்கு சத்தம் போடவும் பயமாக இருந்தது . ஏதாவது  நடந்து விடும் என்ற பயத்தினால் நடுங்கிய வண்ணம்  பார்த்துக் கொண்டே தூங்குவது போன்று பாசாங்கு செய்தேன் .  இவர் தேடுவதைப் பார்த்தல் இவருக்கு  பணம்தான் தேவையாக இருந்திருக்கும்  என்று  மனதுக்குள் நினைத்தேன் . அந்த நேரம் மேசையின் மேலே  இருந்த 300 ரூபா பணத்தை எடுத்துக்

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆவன செய்ய வேண்டும்

Image
சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள்  (பி.எம்.எம்.ஏ.காதர்) சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபைக்கு கல்முனைத் தொகுதி மக்கள் கூட்டு மொத்தமான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆவன செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார் பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்ப மிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; "இந்த நாட்டு மக்கள் நல்லாட்சியை விரும்பி அதனை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக தங்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றியிருப்பதையிட்டு நாமும் அகமகிழ்வுடன் உங்களை வாழ்த்திப் போற்றுகின்றோம். சர்வதேச கீர்த்திமிக்க உங்களது நல்லாட்சி சிறுபான்மையினரின் உரிமைகள் அபிலாஷைகளை உறுதி செய்து கடந்த காலங

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 200 இற்குமேற்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்தது?

Image
வடமாகாண சபையின் 33 ஆவது கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் உள்ள சபை மண்டபத்தில்  இடம்பெற்றது.   வடமாகாண   சபயில்   நிறைவேற்றப்பட்ட  200  இற்கு மேற்பட்ட   தீர்மானங்களுக்கு   என்ன   நடந்தது ?  குறித்த தீர்மானங்களுக்கு   எடுக்கப்பட்ட   நடவடிக்கை   என்ன ? எனக்கேட்டு   மாகாண   சபை   உறுப்பினர்  ஜீ் . ரி . லிங்கநாதன்   விநோத     போராட்டம்    ஒன்றை  நடத்தியுள்ளார் . மாகாண   சபையின்  33  வது   அமர்வு   தற்போது நடைபெற்று   வருகின்றது .  இந்நிலையில்   வவுனியா   மாவட்ட   மாகாண   சபை உறுப்பினர்   ஜீ . ரி . லிங்கநாதன்   நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை   தனது   சட்டை   முழுவதும் எழுதிக்கொண்டு   சபைக்கு   வந்த்துடன் , தனது  12  கோரிக்கைகளை   முதலமைச்சருக்கும் , அவை   தலைவருக்கும் ,  உறுப்பினர்களுக்கும் வழங்கியதுடன்   சபையில்   பதாகைகளுடன்   கூடிய சட்டையுடன்   சபையில்   அமர்ந்துள்ளார் . இதேவேளை  யாழ்.மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முதற்றடவையாக வட மாகாண

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் தேவஸ்தான மஹா யாக பூசையூம் நோர்ப்புக்கட்டும் இன்று இடம் பெற்றது

Image
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் தேவஸ்தான தீமிதிப்பு வைபவம் நாளை புதன் கிழமை இடம்பெறவவுள்ளது. பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (18)ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை (26) நிறைவு  பெறவுள்ளது. ஆவணியில் தாளங்கள் முழங்க வேப்ப மரங்கள் ஓங்காரம் பாட உடுக்கை ஓசை தாலாட்ட  அடையலிலே நடனம் ஆடி தீயிறங்க வாராளாம் அன்னை பாண்டியூர்  வடபத்திரகாளி எனப் போற்றிப் புகழப்படும் கல்முனை பாண்டிருப்பு புண்ணிய பதியில் குடி கொண்டு நாடி வரும் பக்தர்களுக்கு வேப்ப  மர நிழலில் மகா சக்தியாக விளங்கும் அன்னை ஸ்ரீ வடபத்திரகாளி அம்மனின் வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா மன்மத வருடம் ஆவணித் திங்கள் 01 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (18) திருக்கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி ஆவணித் திங்கள் 09ஆம் நாள் (26) புதன்கிழமை தீமிதித்தலுடன் நிறைவு  பெறவுள்ளது. வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா  திருக்கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி இரண்டாம் நாள் அம்மன் அழகிய கும்பத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் இடம் பெற்று கிரியைகளுடன் 5ம் நாள் விசேட பூசையும் அதனைத்தொடர்ந்து அன்ன

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக சிலர் சில ஆக்கங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை

Image
வை.எல்.எஸ். ஹமீட்   இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எனது பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக சிலர் சில ஆக்கங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை என வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது, இதில் அமாஸ் அப்துல் லத்தீப் என்பவர் எனது பெயரைப் பயன்படுத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பாக சில குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதேபோன்று குறித்த ஒரு இணையத்தளத்தில் தலைவருக்கு செயலாளரை நீக்க முடியாது. ஆனால் செயலாளருக்கு தலைவரை நீக்க முடியும் என்று நான் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இணையத் தளத்துடன் நான் தற்போது தொடர்பு கொண்டு விசாரித்தபோது செய்தியின் மூலத்தை பார்த்து உரிய மறுப்பை உடனடியாக வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். வை.எல்.எஸ். ஹமீட் ஏதாவது எழுத வேண்டுமெனில் தனது சொந்தப் பெயரில் எழுதுகின்ற தைரியம் அவருக்கு இருக்கின்றது. ஏவல் ஆட்கள் மூலம் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை. மறுபுறத்தில் இன்

முதல் மூன்று அமைச்சர்கள் பதவியேற்பு

Image
புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர அவர்களும் நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷ அவர்களும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின், தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு !அம்பாறை மாவட்டத்துக்கு கைவிரிப்பு

Image
வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திரு. க. துரைரெட்ணசிங்கம்  நியமனம்  நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.  தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படாதிருந்தது.  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களும் தேசியப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். தமிழ்த

கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதேசத்தில் இடம் பெற்ற தரம் 5 புலமை பரீட்சை

Image
மருதமுனை அல் -மானார் மத்திய கல்லூரியில்  கல்முனை அல் -மிஷ்பாஹ் மகாவித்தியாலயத்தில் 

ஆயுர்வேத மூலிகை மருந்துகள் விற்பனை செய்த இந்தியர் நால்வர் கல்முனையில் கைது

Image
இந்தியாவில் இருந்து சுற்றுலா விடுதியில்  இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் ஈடு பட்ட இந்தியர் நால்வர் கல்முனையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர் . நேற்று கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட வாடி வீட்டு  வீதியில் விடுதி ஒன்றில் வைத்து இவர்கள் நால்வரும் கைது செய்யப் பட்டுள்ளனர் . குறித்த நால்வரும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுர்வேத மூலிகை மருந்துகளும் அழகுசாதனப் பொருட்களும் வைத்திருந்துள்ளனர் . குறித்த நபர்கள் தொடர்பாக  புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலை அடுத்து  தங்களுடன் வைத்திருந்த பெறுமதியான மருந்து வகைகளுடன் கல்முனைப் பொலிசாரினால் நேற்று இரவு கைது செய்யப் பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டு விசாரிக்கப் படுவதுடன்  கல்முனை நீதிவான் முன்னிலையில்  முன்னிலைப் படுதவுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

தென்கிழக்கு பல்கலைக்கழகஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல.எம்.றியாழ் தெரிவு

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் பல்கலைக்கழகஆசிரியர் சங்கத்தின் புதி நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான நிகழ்வு அண்மையில் நடை பெற்ற போதே இவர் கூடுதலான ஆதரவினைப் பெற்று தலைவராக தெரிவு செய்ய்ப்பட்டுள்ளார் இதே வேளை புதிய செயலாளராக கலாநிதி எம்.டி.எம்.இஸ்மாயிலும் பொருளாளராக ஏ.எல்.எம்.ஏ .சமீமும் உப தலைவாக கலாநிதி எம்.ஐ.எம்.கலீலும் உதவிச் செயலாளராக கலாநிதி எச்.எம்.எம்.நளீரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கலாநிதிகளான  எம்.ஐ.எம்.ஹிலால் ஏ.எம்.எம்.நவாஸ் ஏ.றமீஸ் ஏ.ஜவ்பர் மற்றும் எஸ்எம்.ஆலிப் .எம்.எஸ.எம்.ஜலால்டீன் ஆகியோரும் புதிய நிருவாகிகளாக தெரிவு செய்யப்ட்டுள்ளனர்.

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை இடையூறின்றி நடந்து முடிந்தது

Image
கல்முனை  கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலையில் இன்று நடை பெற்ற 5ஆம் தர புலமை பரிசு  பரீட்சைக்கு  மாணவர்களை பெற்றோகள் அழைத்து வருவதையும் ,அதிபர் ஆசிரியர்களின் ஆசிர்வாதம் இடம் பெறுவதையும் , மாணவர்கள  பரீட்சை மண்டபத்துக்கு செல்வதையும் ,மாணவர்களுக்காக பெற்றோர்கள்  வீதி ஓரங்களில் அமர்ந்திருப்பதையும்  படங்களில் காணலாம்  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (23) நடை பெற்றது  நாடு முழுவதும் அமைக்கப்பட்டுளள் 2907 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெற்றது . இம்முறை புலமை பரிசில் பரீட்சையில் 340,926 தோற்றியதுடன்  பரீட்சை கடமைகளில் 2400 அதிகாரிகள் கடமை புரிந்தனர் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.