பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் தேவஸ்தான மஹா யாக பூசையூம் நோர்ப்புக்கட்டும் இன்று இடம் பெற்றது
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் தேவஸ்தான தீமிதிப்பு வைபவம் நாளை புதன் கிழமை இடம்பெறவவுள்ளது.
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (18)ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை (26) நிறைவு பெறவுள்ளது.
ஆவணியில் தாளங்கள் முழங்க வேப்ப மரங்கள் ஓங்காரம் பாட உடுக்கை ஓசை தாலாட்ட அடையலிலே நடனம் ஆடி தீயிறங்க வாராளாம் அன்னை பாண்டியூர் வடபத்திரகாளி எனப் போற்றிப் புகழப்படும் கல்முனை பாண்டிருப்பு புண்ணிய பதியில் குடி கொண்டு நாடி வரும் பக்தர்களுக்கு வேப்ப மர நிழலில் மகா சக்தியாக விளங்கும் அன்னை ஸ்ரீ வடபத்திரகாளி அம்மனின் வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா மன்மத வருடம் ஆவணித் திங்கள் 01 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (18) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஆவணித் திங்கள் 09ஆம் நாள் (26) புதன்கிழமை தீமிதித்தலுடன் நிறைவு பெறவுள்ளது.
வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி இரண்டாம் நாள் அம்மன் அழகிய கும்பத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் இடம் பெற்று கிரியைகளுடன் 5ம் நாள் விசேட பூசையும் அதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பக்தி பரவசமூட்டும் வாழைக்காய் எழுந்தருளப்பண்ணல் நிகழ்வும் விசேட அலங்காரப்பூசையும் நடைபெற்றது.
ஆறாம் நாள் திங்கட் கிழமை அலங்காரப் பூசையைத் தொடர்ந்து அம்பாள் வீதி தோறும் அழகிய முத்துச்சப்ரத்தில் பவனி வருவதும் 7ம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை (25) மஹா யாக பூசையூம் நோர்ப்புக்கட்டும் இடம் பெற்று இன்று நள்ளிரவு தீமூட்டும் வைபவமும் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து 9ம் நாளான நாளை புதன் தீ மிதிப்புடன் ஆலைய வருடாந்த உற்சவ கிரியைகள் யாவும் நிறைவு பெறுவதுடன் மறுநாள் எட்டாம் சடங்கு நிகழ்வும் வைரவர் பூசையூம் நடைபெறும்.
Comments
Post a Comment