பாண்டிருப்பில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் வரங்கள் நல்கிடும் வரலட்சுமி பூசை

இந்துப் பெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது. 

எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்குகொள்வர் என்றாலும் திருமணமான பெண்கள் இந்த விரதத்தை தங்கள் மாங்கல்யம் கெட்டியாக இருக்கவும், வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்கவும் அதிகம் மேற்கொள்வர். 
 அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் வரங்கள் நல்கிடும் வரலட்சுமி பூசை இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடை பெற்றது. கல்முனை பிரதேசத்தில் பிரதான வழிபாடுகள் பஞ்ச பாண்டவர்களின் பதியாக விளங்கும் பாண்டிருப்பில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில்  ஆலய குரு சிவஸ்ரீ மு.கு.சபாரெத்தினம் குருக்கள் தலைமையில்  இடம் பெற்றன . 

அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலட்சுமியின் அம்சங்களை நிறுத்தி  வரலட்சுமி விரதம் மேற்கொண்டு  தம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். சிவனுக்கு வில்வம்,விஷ்ணுவுக்கு துளசி என்பதை போல

 மகாலட்சுமிக்கு அருகம்புல் மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாற்றி அம்பாளை கிழக்குமுகமாக எழுந்தருளச் செய்து வலது பக்கத்தில் அமர்ந்து மஞ்சள் சரடை கும்பத்துடன் சேர்த்து  பின்னர் பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்பாளை ஆராதித்து மஞ்சள் சரடை வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் காப்புக் கட்டிக்கொண்டனர். 






Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்