Posts

அமைச்சர் றவூப் ஹக்கீம் போன்றோர், பாராளுமன்றத்திலே அழுகுரலிலே பேசுகிறார்கள். இவர்கள் பஸ்ஸை விட்டுவிட்டு ஏன் கையைக் காட்டுகின்றார்கள்?

Image
-பாராளுமன்றத்தில் அதாவுல்லா ஆற்றிய உரை- பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம். நஹ்மதுஹு வனுஸல்லீ அலா ரஸுலில் கரீம்.    குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பலரும் பலவிதமாகப் பேசிக்கொள்கின்றார்களே தவிர, எங்களைப் பொறுத்தவரையில்  இதனைச் சரியாக விளங்கியவர்கள் அல்லது சரியாகச் செய்யவேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள். மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதற்கு முதலிலே, தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றம் கொண்டுவருவது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு சிறுபான்மை மக்கள் ஒரு நாளுமே உடன்படமுடியாது. சிறுபான்மை மக்களுக்கு இந்த நாட்டிலே ஒரேயொரு தலைமைத்துவம்தான் வேண்டும். இரண்டு தலைவர்களும் அதிகாரங்களை வெவ்வேறு இடங்களில் வைத்துக்கொண்டிருப்பதால், இந்த நாட்டிலுள்ள எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது. ஆகவே, அதற்கு நாங்கள் உடன்படவில்லை. இருந

கல்முனை வலயக் கல்வி அலுவலக விசேட இப்தார்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு  இன்று வியாழக் கிழமை  அலுவலக வளாகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்றது. கல்முனை நகர ஜும்மாப் பள்ளிவாசல்  பேஷ்  இமாம் யு.எல். இக்பால் (ஹாமி) அவர்களால்  விசேட  நற்சிந்தனை வழங்கப் பட்டது. பாராளுமன்ற  உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் , கல்முனை பிரதி மேயர்  அப்துல் மஜீத் ,மாநகர சபை உறுப்பினர்களான பரகதுல்லாஹ், உமரலி  உட்பட கல்முனை பிரதேச செயலாளர் முகம்மத் கனி , வலயக் கல்விப் பணிப்பாளர்கள் , பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் , ஓய்வு பெற்ற அதிகாரிகள் , வலயக் கல்வி அலுவலக கணக்காளர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள்,அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்  என 200க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர் . 

தேசிய ஷூறா சபையின் ரமாழான் காலத்தில் முஸ்லிம்களுக்கான ஆரோக்கிய வழிகாட்டி

Image
ஆக்கம்: -       டாக்டர்   ஸரூக் சஹாப்தீன் ( MBBS, MD, MRCP, FCCP ) ,  அரச மூலாதார மருத்துவமனை, மாவனெல்லை   ரமழான் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிப்பதற்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள் ;. ஆரோக்கியம் என்பது அல்லாஹ் உலகில் மனிதனுக்கு வழங்கக் கூடிய மிகப் பெரும் ஒரு நன்கொடைகளில் ஒன்றாகும். பாவமன்னிப்பையும் உடலாரோக்கியத்தையும் அல்லாஹ்விடம் அதிகம் கேட்குமாறு நபிகள் (ஸல்) அவர்களும் உபதேசித்தார்கள். இஸ்லாம் கூறும் விதத்தில் நோன்பு நோற்கப்படுமாயின் அது ஆரோக்கியத்திட்கு பெரிதும் துணை புறியும். ‘ நோன்பு நோற்பதன் மூலம் ஆரோக்கியமடையுங்கள்’ என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதே வேளை ,  நோன்பு நோற்பதன் மூலம் ஏற்படக் கூடிய பல சுகாதார நன்மைகள் பற்றிய தகவல்கள் விஞ்ஞான ஆய்வுகள் மூலமும் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆனால் ,  இந்த நற்பயன்களை நாம் அடைகின்றோமா என்றால் மிகவும் சிறிதளவே அடைகின்றோம் என்பதே உண்மை நிலையாகும். உணவு உண்பது தொடர்பாக இஸ்லாம் காட்டித் தரும் நல்ல பழக்கங்கள் நம்மிடம் இல்லாததே இதற்கான முக்கிய காரணமாகும். அன்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வின்

கிழக்கில் சுற்றுலாத்துறையில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் -முதலமைச்சர்

Image
கிழக்கு மாகானத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதன் மூலம் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்க முடியுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார். மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று(25.6.2015) வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண புவியியல் சார் சுற்றுலா தேசப்பட வழிகாட்டி மற்றும் அதன் இணைய தளம் என்பன அறிமுகம் செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் Nசிய புவியியல் சார் ஒன்றியம், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் என்பன இணைந்து அறிமுகம் செய்த இந்த செயற்திட்ட வைபவத்தில் தொடாந்துரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் யுத்தத்துக்குப்பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டு வருகின்றது. சுற்றுலாத்துறை கிழக்கு மாகாண சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பின்றி யிருக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு பெருமளவிலான வேலை வாய்ப்புக்கள

பாராளுமன்றஉறுப்பினர் ஹரீஸின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுல் உலமா, ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் நிருவாகிகளுக்கான இப்தார்

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர்  கல்முனைக்குடி  ஜம்இய்யதுல் உலமா மற்றும் கல்முனைக்குடி ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் நிருவாகிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வொன்று இன்று நடை பெற்றது. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில்கல்முனைக்குடி  ஜம்இய்யதுல் உலமாவின்  தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.சுல்தான் கபுரி . ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியும் கல்முனை ஜம்அய்யதுல் உலமாவின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவருமான அஷ்ஷெய்க் இஸட்.எம். நதீர் ஷர்கி    கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் யு.எல.எஸ்.ஹமீட் ஹாமி கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீல் ஸலபி கல்முனை அபிவிருத்தி போரத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அஸ்ஹர் ஸலபி கல்முனை நகர பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் யு.எல்எம். இக்பால் ஹாமி  அஷ்ஷெய்க் ஏ.எம்.அர்ஷத் நளீமி கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் சிரேஷ்ட உறுப்பினர் மௌலவி எம். ரபீக்   மற்றும் கல்முனை முஹியித்தீன்

கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த தவறே இன்றைய ஆர்பாட்டங்களுக்கு காரணம்-முதலமைச்சர்

Image
கிழக்கு மாகாணத்தில் இன்று ஒவ்வொரு நாளும் வேலையற்ற பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்கள், வெளிமாகாணத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், வெளிமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதிக்கான தொழில் வழங்கப்படாதோர் என்று ஒவ்வொரு நாளும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கடந்த கால ஆட்சியாளர்களினால் விடப்பட்ட தவறுதல்தான் காரணம் என்று கூறினார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட். இன்று புதன் கிழமை (24) மக்கள் சந்திப்பின்போது முதலமைச்சரைச் சந்திக்க ஏராளமான வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் வெளிமாகாணம், வெளிமாவட்டங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் வந்திருந்தனர் அவர்களைச் சந்திக்கும் நிகழ்வில் முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முதலைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்: இன்று கிழக்கு மாகாணத்தில் புறக்கணிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இருக்கிறார் அவர்களுக்கு கூடிய விரைவில் நிரந்தர நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இது தொடர்பில்  ஜனாதிபதியுடனும் பேசியிருக்கிறேன். அதுபோன்று வெளிமாகாணங்களில் கற்பிக்கும் கிழக்கு மாகாண ஆசிரியர்

தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு நட்பிட்டிமுனையில் வீடமைப்பு நிகழ்வு

Image
தேசிய வீடமைப்பு தின வாரத்தையிட்டு கல்முனை  பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுக்கான அடிக்கல் நடும் பிரதான  நிகழ்வு இன்று   நற்பிட்டிமுனை -04 ஆம் பிரிவில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.அமினுதீன்  தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  கல்முனை  பிரதேச செயலாளர்  எம்.எச். முகம்மட் கனி,    கௌரவ அதிதிகளாக  திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம். சாலிஹ்,தேசிய வீடமைப்பு அதிகார சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் நதுப்பாரி ,  திவிநெகு சமுக அபிவிருத்தி  உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத், மருதமுனை நற்பிட்டிமுனை  திவிநெகும  வங்கி வலய முகாமையாளர் ஏ.எம் .நாசீர்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்முனை  பிரதேச செயலாளர்  எம்.எச். முகம்மட் கனி   உரையாற்றுகையில் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சினால் வருடம் தோறும் ஜூன் மாதம் 23ம் திகதி தேசிய வீடமைப்பு தினம் கொண்டாடப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் இந்த வருடம்  வீடுகளை அமைத்துக் கொள்ள கல்முனைப் பிரதேசத்திலிருந்;து குறைந்த வருமானம் பெறுகின்ற வறிய   குடும்கங்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்

Image
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைந்து விடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யவேண்டும் எனக் கோரிய அவர், மக்களை ஏமாற்றும் வகையிலேயே புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப் பதாகவும் தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ள நிலையிலேயே அதற்கு முற்றிலும் மாறாக சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் மாத்திரமன்றி சிறிய கட்சிகளும் ஒற்றுமைப்பட்டே நாட்டில் ஓர் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த உதவி செய்தவர்களை இந்த

நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய​ முத்துச் சப்புறத் திருவிழா

Image
நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய​ வருடாந்த​ பிரமோற்சவப் பெருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய இன்று முத்துச் சப்புறத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.நற்பிட்டிமுனை, கல்முனை நகா் பிரதேசங்களில் விநாயகப்பெருமான் முத்துச்சப்புறத்தில் உலாவந்தாா். கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த உற்சவம் 24ஆம் திகதி நாளை புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.

மண்டூர் மதிதயான் கொலை- எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் 03 பேர் கைது

Image
நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த சச்சிதானந்தம் மதிதயான் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு, மண்டூரில்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று பேரை  ஞாயிற்றுக்கிழமை  கைதுசெய்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.   எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் மேலும் கூறினர். முன்னதாக பட்டிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின்  முன்னாள் உறுப்பினர் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மற்றைய இருவரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்  மண்டூர்  மதிதயான் கொலை-  எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின்  முன்னாள் உறுப்பினர்  03 பேர் கைது 

தென்கிழக்கு பலகலைக்கழகத்தின், உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமனம்

Image
இலங்கை தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது பதவிக்காலம் கடந்த 2015-06-21ம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளார்.   தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வெற்றிடத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் 15 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 13 பேர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை முன்பாக தோன்றி அவர்கள் சார்ந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தனர் இதில் மூவர் பேரவையால் தெரிவுசெய்யப்பட்டு சிபார்சுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ பேராசிரியரான நாஜீம் அவர்கள் காலியை பிறப்பிடமாக கொண்டவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார்.  

மருதமுனை “ஷம்ஸ்95”முன்பாடசாலையின் “பட்ஸ் இன் மூன்லைட்”

Image
பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை “ஷம்ஸ்95”முன்பாடசாலையின் “பட்ஸ் இன் மூன்லைட்” நிகழ்வு  அண்மையில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.இதில்; பிரதம அதிதியாகக சரோ  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.எம்.தாஜூதீன் விசேட அதிதியாக பொறியிலாளர் எம்.எஸ்.எம்.பஸீல் அதிதிகளாக கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த லெபடினன்களான வஸந்த நவரத்தன அகியோர் கலந்து கொண்டனர்.இதில் அதிதிகள்  சிறுவர் சந்தையைத் திறந்து வைத்து சிறுவர்களிடம்; பொருட்கள் கொள்வனவு  செய்தனர்;.