வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைந்து விடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யவேண்டும் எனக் கோரிய அவர், மக்களை ஏமாற்றும் வகையிலேயே புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப் பதாகவும் தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ள நிலையிலேயே அதற்கு முற்றிலும் மாறாக சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் மாத்திரமன்றி சிறிய கட்சிகளும் ஒற்றுமைப்பட்டே நாட்டில் ஓர் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த உதவி செய்தவர்களை இந்த நாட்டின் அரசியலிலிருந்து இல்லாமல் செய்யும் சூழ்ச்சியாகவே இத்திருத்தம் கொண் டுவரப்பட்டுள்ளது. இது நியாயமாகுமா?
சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை ஒழித்து இரண்டு கட்சி ஆட்சிமுறைக்கு வித்திடும் வகை யிலான தேர்தல் திருத்தம் நியாயமானதாக அமையாது. மக்களை ஏமாற்றுவதற்கே தொகுதிகளில் அளிக்கப்படுகின்ற வாக்கு களை எடுத்து மாவட்டத்தில் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாக கணிக்கப்பட பிரேரிக்கப்பட்டுள்ளது. இது ஜே.வி.பி போன்ற சிறிய கட்சிகளை அரசியலிருந்து நீக்குவதற்கே வித்திடும் என்றார்.
Comments
Post a Comment