கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த தவறே இன்றைய ஆர்பாட்டங்களுக்கு காரணம்-முதலமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் இன்று ஒவ்வொரு நாளும் வேலையற்ற பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்கள், வெளிமாகாணத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், வெளிமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதிக்கான தொழில் வழங்கப்படாதோர் என்று ஒவ்வொரு நாளும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதற்குக் காரணம் கடந்த கால ஆட்சியாளர்களினால் விடப்பட்ட தவறுதல்தான் காரணம் என்று கூறினார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்.
இன்று புதன் கிழமை (24) மக்கள் சந்திப்பின்போது முதலமைச்சரைச் சந்திக்க ஏராளமான வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் வெளிமாகாணம், வெளிமாவட்டங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் வந்திருந்தனர் அவர்களைச் சந்திக்கும் நிகழ்வில் முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முதலைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:

இன்று கிழக்கு மாகாணத்தில் புறக்கணிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இருக்கிறார் அவர்களுக்கு கூடிய விரைவில் நிரந்தர நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இது தொடர்பில்  ஜனாதிபதியுடனும் பேசியிருக்கிறேன். அதுபோன்று வெளிமாகாணங்களில் கற்பிக்கும் கிழக்கு மாகாண ஆசிரியர்களையும் இங்கே உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் 1,990 ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் தொடர்பான விவரத்தை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும்  கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்கு நியமனம் வழங்கி அனுப்பிவைத்தமை போன்ற விடையங்களை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்டும் காணாதது போலிருந்துள்ளார்.
இது சிறுபான்மைச் சமூகங்களுக்கு  இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும். அவர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் இம்முறை வழங்கப்படவுள்ள தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட 110 பேருக்கேயாகும்’ என்றார்.
கிழக்கில் ஆசிரியர் பதவி வெற்றிடம் எதுவும் இல்லை என்று  சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறிவருகின்றார். இதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை இன்னும் 2 வாரங்களில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்றும் அதற்காக சகல ஆதாரங்களை திரட்டி எடுத்துள்ளேன் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்