தென்கிழக்கு பலகலைக்கழகத்தின், உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமனம்
இலங்கை தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது பதவிக்காலம் கடந்த 2015-06-21ம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வெற்றிடத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் 15 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 13 பேர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை முன்பாக தோன்றி அவர்கள் சார்ந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தனர் இதில் மூவர் பேரவையால் தெரிவுசெய்யப்பட்டு சிபார்சுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ பேராசிரியரான நாஜீம் அவர்கள் காலியை பிறப்பிடமாக கொண்டவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார்.
Comments
Post a Comment