தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு நட்பிட்டிமுனையில் வீடமைப்பு நிகழ்வு
தேசிய வீடமைப்பு தின வாரத்தையிட்டு கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுக்கான அடிக்கல் நடும் பிரதான நிகழ்வு இன்று நற்பிட்டிமுனை -04 ஆம் பிரிவில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.அமினுதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, கௌரவ அதிதிகளாக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம். சாலிஹ்,தேசிய வீடமைப்பு அதிகார சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் நதுப்பாரி , திவிநெகு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத், மருதமுனை நற்பிட்டிமுனை திவிநெகும வங்கி வலய முகாமையாளர் ஏ.எம் .நாசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி உரையாற்றுகையில் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சினால் வருடம் தோறும் ஜூன் மாதம் 23ம் திகதி தேசிய வீடமைப்பு தினம் கொண்டாடப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் இந்த வருடம் வீடுகளை அமைத்துக் கொள்ள கல்முனைப் பிரதேசத்திலிருந்;து குறைந்த வருமானம் பெறுகின்ற வறிய குடும்கங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் ஒவ்வென்றுக்கும் 75000 ரூபாவினை வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சினால் வழங்கப்படும் இவற்றைக் கொண்டு ஒருவீட்டினை அமைத்தக் கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பெறுகின்ற பணத்தை வீண் விரயம் செய்து விடாமல் வீட்டை கட்டி முடிக்க வேண்டும் . இதன் மூலம் உங்கள் கிராமத்தில் நல்ல பிரஜைகள் உருவாக வேண்டும் . நல்ல சூழலை உருவாக்கி உங்களின் பிள்ளைகள் நல்ல நிலையை அடைய பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும் . இந்த ஊரில் பிரதேச செயலாளராக இருந்த ஏ.எல்.எம் .பளீல் அவர்கள் இந்த ஊருக்கு மட்டுமன்றி இந்த பிரதேசத்துக்கே முன்மாதிரியாக திகழ்ந்த நல்லதொரு கல்விமான். அவர் எழுதிய பல நூல்கள் பலரின் உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. அதில் நானும் ஒருவன் என்பதை இந்த மண்ணில் இருந்து கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment