Posts

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது

Image
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்ட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்

Image
அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் இன்று (09) நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர - நீர் வழங்கல் வசதிகள். 02. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க - நகர அபிவிருத்தி. 03. எஸ். சேனாநாயக்க - நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி. 04. எம்.சி.எல். றொட்ரிகோ - காணி மற்றும் காணி அபிவிருத்தி. 05. எஸ்.எச்.ஏ.என்.டீ. அபேரட்ன - பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி. 06. பீ.கே.எஸ். ரவீந்திரா - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் 07. டீ.ஏ.டபிள்யூ. வணிகசூரிய- புகையிரத சேவைகள். 08. பேராசிரியர். சுனந்த மத்தும பண்டார- தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம். 09. டீ.எஸ். விஜெயசேகர - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை. 10. எல்.டீ. சேனாநாயக்க - சர்வதேச ஒத்துழைப்பு. 11. ஆர்.எஸ்.எம்.வி. செனவிரத்ன- சுதேச வைத்திய சேவைகள். 12. ஏ.எஸ். பத்மலதா- மகளிர், சிறுவர் அலுவல்கள். 13. கே.எச்.டீ.கே. சமரகோன்- மின்வலு. 14. எம்.ஏ.பீ.வ...

வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

Image
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தில்  ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும், காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுவதுடன் கொதித்தாறிய நீரை பருகுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் எனவும், இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் சுகாதார நிலமையினை கண்காணிப்பதற்கு கல்முனைப் பிராந்தியத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக சகல சுகாதார வைத்தியதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது, (அரசாங்க தகவல்...

மட்டக்களப்பில் இன்று அதிகாலை வழிப்பறி கொள்ளை - பொலிஸார் தீவிர விசாரணை

Image
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று (08) அதிகாலை ஆயுதங்களுடன் வந்த சிலர் வழிப்பறி கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.00 மணியளவில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு ஆலையடி பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் ஆயுதங்களுடன் நின்று அதிகாலையில் வீதியினால் பயணித்தவர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், தொழிலுக்கு சென்றவர்கள் என பலரிடம் இவ்வாறு கொள்ளையிடப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கல்முனை செயலான் வங்கிக்கிளையின் 8வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

Image
கல்முனை செயலான்  வங்கிக்கிளையின்  8வது  ஆண்டு நிறைவு  கொண்டாட்டம்  வங்கி முகாமையாளர் எஸ்.உதயகுமரன்  தலைமையில்  கடந்த புதன்கிழமை (04) சாய்ந்தமருது  சீ பிரீஸ்  மண்டபத்தில் நடை பெற்றது  முன்னாள் முகாமையாளர்  திருமதி பிறேமினி  உட்பட  வங்கி  ஊழியர்கள்  வாடிக்கையாளர்கள்  கலந்து கொண்டனர் 

கல்முனையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மாலைதீவு பிரஜை கைது

Image
இலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒரவர் கைதாகியுள்ளார். அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கடைதொகுதி ஒன்றில் குறித்த பிரஜை கடவுச்சீட்டு மற்றும் விசா ஏதுவும் இன்றி சந்தேகத்திற்கிடமாக தங்கி இருப்பதாக புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து கைதாகியுள்ளார். கடந்த 7 ஆம் திகதி மாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரிய பண்டாரவின் தலைமையின் கீழ் இயங்கும் கல்முனை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள் கீர்த்தனன்(6873), ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேக நபரான மாலைதீவு நாட்டை சேர்ந்த இப்ராஹீம் ரசீட் (வயது-54) என்பவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் மாலைதீவு நாட்டு அடையாள அட்டை ஒன்று தொலைபேசி ஒன்று ரெப் ரக உபகரணம் ஒன்று வைத்திய அறிக்கைகள் அடங்கிய தோல்பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் சட்டபூர்வமாக தங்கி இருப்பதற்கான எதுவித கடவுச்சீட்டோ குடிவரவு குடியகல்வு செய்வதற்கான விசாவோ அவர் வசம் இல்லை என்பதும் குற...

பிரதி அமைச்சர்கள் மூவரும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

Image
நேற்று (27) பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிமல் லன்சா, காஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக அனுரத்த ஆகிய மூவரும் இன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதனடிப்படையில் நிமல் லன்சா சமுதாய வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராகவும், காஞ்சன விஜயசேகர கடற்தொழில் மற்றும் நீரக வளமூலங்கள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இந்திக அனுருத்த பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

Image
புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு, எஸ்.எம் மொஹமட் - சுற்றாடல் மற்றும் விமான சேவைகள் ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி - வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் ஜே.ஜே ரத்னசிறி - நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம் ரவிந்திர ஹேவாவித்தாரண - பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் ஜே.ஏ ரஞ்சித் - கைத்தொழில் மற்றும் வழங்கள் முகாமைத்துவம் டீ.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க - உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் எம்.எம் காமினி செனவிரத்ன - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் டபுள்யூ.ஏ சூலாநந்த பெரேரா - தகவல் தொலைத் தொடர்பு வசந்த பெரேரா - மின்சக்தி மற்றும் வலுசக்தி எம்.எம்.பி.கே மாயாதுன்ன - துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து எஸ். ஹெட்டியாரச்சி - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ஆர்.பி ஆர்யசிங்க - வெளிநாட்டு உறவுகள் ...

அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

Image
அரசாங்கத்துக்கு உட்பட்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாயாதிக்க சபைகளுக்கு தலைவர் மற்றும் பணிப்பாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள தொழில் அனுபவத்தைக் கொண்டவர்களிடம் இருந்து ஜனாதிபதி செயலாளர் விண்ணப்பங்களை கோரியுள்ளார். இதற்கு அமைவாக அரசாங்கத்திற்கு உட்பட்ட மேம்பாட்டு பிரதி நிறுவனங்கள், அரசியல் யாப்பு சபைகள், நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள், நியாதிக்க சபைகள் ஆகியவற்றிற்கு தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர் ரீதியில் பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள தொழில் துறையினர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்று ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தர வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனைகளை டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மேலதிக செயலாளர், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 1 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நேர்முக பரீட்சை சபையினால் தகுதியை கொண்டவர்கள் நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.

“ஐ-ரோட்” திட்ட வீதிகளை துரிதமாக செப்பனிடுமாறு

Image
கிழக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் “ஐ-ரோட்” வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்துமாறும், குறிப்பாக காத்தான்குடி டீன் வீதி, மத்திய வீதி மற்றும் முகைதீன் பள்ளிவாசல் வீதி  ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடுமாறும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இருந்த போது குறித்த அமைச்சின் “ஐ-ரோட்” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகளை உள்ளடக்கியிருந்ததோடு அதற்கான நிதியினை கொந்தராத்து நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்திருந்தார்.  ஆட்சி மாறியுள்ள இந்நிலையில் குறித்த வேலைத்திட்டங்களை விடயப்...

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இவ்வாறு பதவியேற்கின்றனர். அத்துடன் புதிய அமைச்சின் செயலாளர்கள் நியமனங்களும் இதன்போது இடம்பெறவுள்ளது. புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம், சமல் ராஜபக்‌ஷ - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல் வசதிகள். காமினி லொக்குகோ - நகர அபிவிருத்தி. மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி. எஸ்.பீ. திஸாநாயக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி. ஜோன் செனவிரத்ன - பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி. சீ.பீ. ரத்னாயக்க - புகையிரத சேவைகள். லக்ஷமன் யாப்பா அபேவர்தன - தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம். சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை. அநுர பிரியதர்ஷன யாப்பா - உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை. சுசில் பிரேம்ஜயந்த் - சர்வதேச ஒத்துழைப்பு. பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய சேவைகள். ரஞ்சி...

பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவியேற்பு

Image
புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை (27) பதவியேற்க உள்ளனர். நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இவ்வாறு பதவியேற்க உள்ளனர். அத்துடன் புதிய அமைச்சின் செயலாளர்கள் நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

நாளை நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை

Image
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் - டியுசன் வகுப்புகள், மீட்டல் பயிற்சிகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் தடைசெய்யப்படுகின்றன. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார். இதுதொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது 1911 எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும். க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் இரண்டாம் திகதி நாடாளவிய ரீதியில் நான்காயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகிறது. இம்முறை ஏழு இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்

Image
பாதுகாப்பான நாடொன்றினை உருவாக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். இதன்போது, ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இடங்கள் தொடர்பில் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. அதேபோல், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களை தௌிவுபடுத்தும் செயற்பாடுகளும் குறித்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, இந்த வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப் படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தா...

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வௌியீடு

Image
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அதிகாரங்களின் ஊடாக 25 நிர்வாக மாவட்டத்தினுள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் முப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தல்

Image
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பதில் பொலிஸ் மா அதிபர் திரு. சீ டீ விக்ரமரத்னவும் கலந்துகொண்டார். இச்சந்திப்பின் போது, போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் மற்றும் பொதுமக்களுக்கு அவை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு தேவையான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு செயலாளர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. எம் ஆர் லத்தீப்பும் கலந்துகொண்டார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

புதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படலாம்

Image
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.   கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.    அதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் நியமித்ததுடன் நேற்று 16பேர்கொண்ட இடைக்கால அரசாங்கமொன்றையும்  அமைத்திருந்தார்.   ஐ.தே.முவின் அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவராக சபாநாயகர் கருஜயசூரிய உள்ள நிலையில், புதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. 

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Image
நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் ...

இராஜாங்க அமைச்சர்கள் திங்கட்கிழமை நியமனம்

Image
புதிய அரசாங்கத்துக்கான இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படுவார்கள் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நியமிக்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு புதிததாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் - முழு விபரம்!

Image
இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு தற்போது நடைபெறுகின்றது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி, புத்தசாசனம், கலாச்சாரம், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதேவேளை, பிரதமர் உள்ளிட்ட மேலும் 15 பேர் இன்று அமைசர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா - நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம். ஆறுமுகம் தொண்டமான் - சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு. தினேஷ் குணவர்தன - வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள். டக்ளஸ் தேவானந்தா - கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள். பவித்ராதேவி வன்னிஆராச்சி - மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியம் பந்துல குணவர்தன - தகவல் தொலைத் தொடர்பு, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஜனக பண்டார தென்னகோன் - ப...

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு - ஜனாதிபதி, பிரதமர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

Image
புதிய அமைச்சரவை பதவி ஏற்பில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

Image
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறி...

நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரதேசத்திற்கான விவாகப் பதிவாளராக இக்பால் நியமனம்

Image
நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரதேசத்திற்கான விவாகப் பதிவாளராக ஓய்வு பெற்ற  சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்   சேகு இப்றாலெவ்வை முகம்மது இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்    அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. துமிந்த திசாநாயக்க முன்னிலையில் 2019. 11.20 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டதை காணலாம் 

குற்றப் புலணாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்

Image
குற்றப் புலணாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஷானி அபேசேகர காலி பிரதி பொலிஸ்மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கை

Image
தனது உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய ஊடகப் பிரிவின் ஊடகவும், தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தின் ஊடக மாத்திரமே வெளியிடப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்து ஜனாதிபதி இது தொடர்பில் அறிவித்துள்ளார். ஜனாதிபதி என்ற வகையில் தான் வெளியிடும் அறிக்கைகள் சமூக ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்டு பொய்யான செய்திகளை உள்ளடக்கி வெளியிடப்படுவதாகவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.