ஜனாதிபதியின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்



பாதுகாப்பான நாடொன்றினை உருவாக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதன்போது, ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இடங்கள் தொடர்பில் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

அதேபோல், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களை தௌிவுபடுத்தும் செயற்பாடுகளும் குறித்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப் படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது