வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தில் 

ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும், காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுவதுடன் கொதித்தாறிய நீரை பருகுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் எனவும், இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் சுகாதார நிலமையினை கண்காணிப்பதற்கு கல்முனைப் பிராந்தியத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக சகல சுகாதார வைத்தியதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது,

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்