புதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படலாம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. 
 கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.    அதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் நியமித்ததுடன் நேற்று 16பேர்கொண்ட இடைக்கால அரசாங்கமொன்றையும்  அமைத்திருந்தார். 
 ஐ.தே.முவின் அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவராக சபாநாயகர் கருஜயசூரிய உள்ள நிலையில், புதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்