Posts

இன்று காலை குருநாகலை தோரயாய எனுமிடத்தில் வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Image
ஜனாஸாவை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்  குருநாகலை தம்புல்லை வீதி தோரயாய பாடசாலை முன்பாக   வீடு வீடாக சென்று ஹதியா கேட்கும் நபர் ஒருவர் பாதையை கடக்கும் போது கெப் வண்டி மோதுண்டு ஸ்தலத்திலே உயிரிளந்துள்ளார். குறித்த நபரின் ஜனாஸா குருநாகலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அவரைப்பற்றி அறிந்துகொள்ள எந்த ஆவணமும் அவரிடம் இருக்கவில்லை எனவும், போலீசார் மேலதிக விசாரணைகள்  மேற்கொண்டு வருவதாகவும், பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

கல்முனையில் பெண்ணின் கழுத்திலிருந்து தங்க சங்கிலி அறுத்த கொள்ளையர் கைது!! நகையும் மீட்பு !!!

Image
நேற்று   (14) கல்முனை  பொலிஸ்  பிரிவில் இடம் பெற்ற கொள்ளை சம்பவமான பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்களில்  வந்து அபகரித்து சென்றவர் கல்முனை பொலிசாரினால் கைது செய்யப் பட்டுள்ளார் .  கைது செய்யப் பட்டவர் பயன் படுத்திய மோட்டார் சைகளும்  தங்க சங்கிலியும்  கைப்பற்றப் பட்டுள்ளது.  கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரின் வழி   காட்டலில் பெருங் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பீ.நிமால் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப் பட்ட மோட்டார் சைகளையும் ,தங்க சங்கிலியையும்  பொலிஸ் குழுவையும் காணலாம் 

வட கிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்காக மர்ஹூம்அஷ்ரஃப்புடன் இணைந்து குரல் கொடுத்தவர் அலவிமௌலானா

Image
பிரதி   அமைச்சர்   ஹரீஸ் ஆளுமை   நிறைந்த   மூத்த   முஸ்லிம்   அரசியல்வாதியும் , சிறந்த   தொழிற்சங்கவாதியுமான   அஷ்ஷெய்க்   அலவி மௌலானாவின்   மறைவு   நாட்டிற்கும்   குறிப்பாக முஸ்லிம்   சமூகத்திற்கும்   பேரிழப்பாகும்   என விளையாட்டுத்துறை   பிரதி   அமைச்சரும் , ஸ்ரீலங்கா முஸ்லிம்   காங்கிரஸின்   பிரதித்   தலைவருமான சட்டத்தரணி   எச் . எம் . எம் . ஹரீஸ்   வெளியிட்டுள்ள தனது   அனுதாபச்   செய்தியில்   குறிப்பிட்டுள்ளார் . அவர்   அனுதாபச்   செய்தியில்   மேலும்   குறிப்பிடுகையில் , ஸ்ரீலங்கா   சுதந்திக்   கட்சியின்   வளர்ச்சிக்கும்   கட்சியினை ஆட்சி   பீடம்   ஏற்றுவதற்கும்   அமரர் பண்டாரநாயக்காவுடன்   தீவிரமாக   செயற்பட்ட   ஒரு மூத்த   முஸ்லிம்   தலைவர்   மர்ஹூம்   அலவி மௌலானா   ஆவார் . முன்னாள்   ஜனாதிபதி   சந்திரிக்கா   பண்டாரநாயக்கா அவரின்...

அலவி மௌலானாவின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பு

Image
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்  முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி முன்னாள் அமைச்சருமான மர்ஹ{ம் அலவி மௌலானாவின் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- அலவி மௌலான அவர்கள் தனது அரசியல் பணியை தொழிற்சங்கவாதியாக ஆரமபித்து தொழிலாளர்களின் உரிமைக்காகவும், இனங்களுக்கிடையில் பலமான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் பல தசாப்தங்களாக பாடுபட்ட தலைசிறந்த மூத்த அரசியல் தலைவர். குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்றவர். அவர் முஸ்லிம் சமூகத்துக்காக ஆற்றிய சேவைகள் ஒருபோதும் மறக்க முடியாதவை.  அவர் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்த காலப்பகுதியில் முஸ்லிம்...

எதிரியைக் கூட நோகடிக்காத உள்ளம் கொண்டவர் அலவி மௌலானா

Image
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ( சாய்ந்தமருது எம் . எஸ் . எம் . சாஹிர் ) மூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியும் முன்னாள் ஆளுனருமான அஸ்ஸெய்யத் அலவி மௌலானாவின் மரணச் செய்தி என்னை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே . எம் . அப்துல் றஸ்ஸாக் ( ஜவாத் ) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார் .  அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது , அஸ்ஸெய்க் அலவி மௌலானா உயர்ந்த பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்தவர் . அவரது கண்ணியத்தைப் பற்றிச் சொல்லப் போனால் , மறைந்த தலைவர் அஷ்ரப் , இவரைக் காணும் இடமெல்லாம் அவரது கையை முத்தமிட்டுக் கொள்வார் . எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர் என்று அடிக்கடி கூறுவார் . ஏனையோரையும் கையை எடுத்து முத்தமிட்டும்படி பணிப்பார் . ஏனென்றால் மௌலானா வம்சம் நபி ( ஸல் ) அவர்களின் தோன்றல்களிலிருந்து வந்தவர்கள் என்பதன் காரணமாக அவருக்கு தலைவர் அப்படிப்பட்ட கண்ணியத்தை வழங்குவார் . அந்த கண்ணியம் உண்மையாக அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான் . ஏனென்றால் ஏழை , பணக...

ஜே.வி.பி முன்னாள் தலைவர் சோமவங்ச காலமானார்

Image
ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று (15) காலை காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 74 ஆகும். மக்கள் விடுதலை முன்னணியின் நான்காவது தலைவராக செயற்பட்ட அவர், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2014 பெப்ரவரி வரை அக்கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அக்கட்சியிலிருந்து இளைப்பாறி (பிரிந்து) மக்கள் தொழிலாளர் கட்சியினை ஆரம்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தராக நற்பிட்டிமுனை அபுல் பஸால்

Image
கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தராக நற்பிட்டிமுனையைச் சேர்ந்த  ‪ அப்துல் மஜீத்  அபுல் பஸால்   இன்று (2016/06/15) தனது கடமைகளை பொறுப்பெடுத்து கொண்டார்.

அம்பாறை மாவட்டத்துக்கான பேரீத்தம்பழ விடயம் ஜனாதிபதி பிரதமர் கவனத்துக்கு சென்றுள்ளன

Image
 சவூதி அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு நோன்புக்காக வழங்கப்பட்ட பேரீத்தம் பழ வினியோகத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றம் சாட்டியூள்ளது. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நூறு வீத பங்களிப்பை வழங்கிய அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய அநீதி இழைக்கப் படுவதாகவூம் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப்.செயலாளர் எம்.ஏ.எம்.றஸீன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர் அவர்கள்; மேலும் தெரிவிக்கையில் கடந்த ஆண்டு 250 தொண் கிடைக்கப் பட்ட நிலையில் இந்த வருடம் 200 தொண்ணாக குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன்  ஒப்பிடுகையில்  20வீதமாககுறைக்கப்பட்டு  குறைந்தளவூ பேரீத்தப் பழ தொகையே அம்பாறை மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. அதுவூம் ஒரு வாரம் கழித்தே கிடைத்துள்ளது. கிடைத்துள்ள குறைந்த தொiகையை சனத் தொகைக்கேற்ப   நோன்பு நோற்கும் முஸ்லிம் கிராமங்களுக்கு பகிர்ந்தளிப்பதில் சிக்கல் நிலை தோண்றியூள்ளது.   இச்சம்பவம் தொடர்பாக முஸ...

தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சென்ற கிழக்குமாகாண கல்வியியலாளர்கள்

Image
உல­க­வங்­கியின் அனு­ச­ர­ணை­யுடன் கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 30 உய­ர­தி­கா­ரிகள் கொண்ட கல்­வி­யி­ய­லாளர் குழு­வொன்று தாய்­லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்­டிற்கு இரு­வா­ர­கால விஜயம் மேற்­கொண்­டு­கடந்த  சனிக்­கி­ழமை இரவு பய­ண­மா­னது. கிழக்­கு­மா­காண பிர­தம செய­லாளர் அபே­கு­ண­வர்த்­தன, கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் அசங்­க­அ­பே­வர்த்­தன, கிழக்கு மாகாணக் கல்­விப்­ப­ணிப்­பாளர் எம்.ரி.ஏ.நிசாம் உள்­ளிட்ட இக்­கு­ழுவில் தெரி­வு­செய்­யப்­பட்ட மேல­திக மாகா­ணக்­ கல்­விப்­ப­ணிப்­பா­ளர்கள், வல­யக்­கல்­விப்­ப­ணிப்­பா­ளர்கள் கல்­வித்­திணைக்­க­ளத்தில் பணி­யாற்­றும்­நான்கு பொறி­யி­ய­லா­ளர்கள் பிர­தம கணக்­காளர் உள்­ளிட்ட 30பேர்  இக்குழுவில் அடங்குகின்றனர்  பாட­சா­லை­ முகா­மைத்­துவம் மற்றும் பாட­சா­லை­ ஆசி­ரியர் அபி­வி­ருத்தி தொடர்­பாக இக்­கு­ழு­வினர் அந்­நாட்­டி­லி­ருக்­கக்­கூ­டிய நல்ல அம்­சங்­களை நேர­டி­யாக கண்டு அறி­ய­வுள்­ளனர். இவ்­வம்­சங்­களை கிழக்கில் அறி­மு­கப்­ப­டுத்தி கல்­வி­அ­பி­வி­ருத்­தியை மேற்­கொள்­வது இவ்­வி­ஜ­யத்தின் நோக்­க­மா­க­வுள்­ளது. 12ஆம் திகதி ...

நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலைக்குரிய சொந்தக் கட்டிடத்தை விட்டு விட்டு மாற்றார் கட்டிடத்துக்கு போக முடியாது

Image
நற்பிட்டிமுனையில் ஆரம்பிக்கப்படவுள்ள  திவி நெகும வங்கி நடமாடும் சேவைக்கு இனங் காணப்பட்டுள்ள கட்டிடம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டிடம் எனவும் சொந்த கட்டிடத்தை விட்டு விட்டு வேறு கட்டிடத்துக்கு  போக முடியாது என அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபருக்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனையில் இரண்டு வருடங்களாக ஆயர்வேத வைத்தியசாலை இயங்கி வருகின்றது. அந்த வைத்தியசாலைக்கு சொந்தமான  கட்டிடத்தை நடமாடும் சேவைக்கு பயன்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதப் பட்டுள்ளது. அமைச்சரினால் அம்பாறை அரசாங்க அதிபருக்கு எழுதப் பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது. நற்பிட்டிமுனையில் இயங்கும் ஆயூர்வேத வைத்தியசாலை  கடந்த 2014 ஆம் ஆண்டு அம்பாறையில் நடை பெற்ற தெயட்ட கிருள்ள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வைத்தியசாலைக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு ஆயூர் வேத வைத்தியசாலை திறந்து வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு கல்லோயா குடியேற்றத் திட்டத்...

ஹசனலி பக்குவமறிந்து பேச வேண்டும் - ஹக்கீம் சாட்டை

Image
ஹசன் அலி சொல்லித்திரிவது போல நான் பல கோடி ரூபாய் பணங்களை சுருட்டிக் கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கட்சி முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு தோம்புக் கண்டத்தில் இடம்பெற்ற அம்பாரை மாவட்டத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற பல கோடி ரூபாய் பணங்களை நான் சுருட்டிக் கொண்டதாக புதிய கதை யொன்றை ஹசன் அலி அவர்கள் பரப்பி வருவதாக பலரும் வந்து சொல்லுகின்றார்கள். கட்சியின் பணத்தை கொள்ளையடிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. இது எனக்கு கவலையை ஏற்படுத்துகின்ற விடயம். மக்கள் மத்தியில் எங்களைப் பிழையாகக் காட்டுவதற்காக இவ்வாறான பொய்யான செய்திகளை ஹசன் அலி பரப்புவது கண்டிக்கத்தக்கதாகும். தேர்தல் காலங்களில் கட்சியின் வெற்றிக்காக...

.மண்டூருக்கு பஸ் சேவை சவளக்கடை ஊடாக ஆரம்பம்! ஹலீம் நடவடிக்கை!!

Image
(எம்.எம்.ஜபீர்) கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் சேவைகள் இன்று(8)தொடக்கம் சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் இச்சேவையானது சவளக்கடை உப தபால் அலுவலக சந்தியூடாகவே இடம்பெற்று வந்தது. அதன் காரணமாக 15ஆம் கிராமம், அன்னமலை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை பெறுவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.  கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய யுத்தத்தின் காரணமாக வர்த்தக கேந்திர நிலையமாக காணப்பட்ட சவளக்கடை பிரதேசம் முற்றாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக  கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவை சவளக்கடை உப தபால் அலுவலக சந்தியூடாகவே இடம்பெற்று வந்தது.  யுத்தம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் கடந்த மூன்று வருடங்களாக இப்பிரதேசத்தில் மக்களின் குடியிருப்புக்களும், வர்த்தக நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டு சவளக்கடை பிரதேசம் பழைய நிலைக்கு வந்துள்ளதன் காரணமாக பொதுமக்களும் வர்த்தகர்களும் கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை  சவளக்க...

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் தற்காலிக அதிபராக எம்.ஏ.எம்.இனாமுல்லா நியமனம்.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்)  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிப்புரையில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிக்கு தற்காலிக அதிபராக புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் அதிபராக் கடமையாற்றிய எம்.ஏ.எம்.இனாமுல்லா 2016.06.03ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேயவர்தன வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.   மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கடந்த இரண்டு வருடங்களாக அதிபராகக் கடமையாற்றிய எம்.எம்.ஹிர்பஹான் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இணைந்து கொள்ளுமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேயவர்தன வினால் பணிக்கப்பட்டுள்ளார் . அதிபர் எம்.எம்.ஹிர்பஹான்  அல்மனாரில் ஆசிரியராகவும்ப,குதித் தலைவராகவும், உதவி அதிபராகவும் பிரதி  அதிபராகவும் கடமையாற்றி 2014.01.06 ஆம் திகதி அல்மனாரின் அதிபராகக் கடமையேற்று பாடசாலையை சிறப்பாக வழிநடாத்தி வந்த நிலையில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. எந்த வித குற்றங்களும் இழைக்காத நிலையில் அதிபர் ஹிர்பஹான் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பில் பெரும்பாலான ஆசிரிய...

திறந்த பாதையை மூடி கொஸ்கமவில் ஆர்ப்பாட்டம்

Image
கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட அனர்த்தத்தின் காரணமாக அழிவுற்ற தங்களது வீடுகளை கட்டித் தருவதற்கு முன்னர், முகாமிற்கு முன்னால் உள்ள வீதியை திறந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.   குறித்த பாதையை திறந்தமையால் தாங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவித்து, சாலாவ கிராம மக்கள் சிலர், சாலாவ முகாமிற்கு முன்னால் அமைந்துள்ள் பாதையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   சுமார் 300 பேர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, குறித்த வீதியில் எரிந்த மரங்கள், பொருட்களை இட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.   இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கசகசா” ஒரு போதைப் பொருளா?

Image
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள்ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Poppy என்று சொல்லப்படும். இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அதுமுழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால் பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போதுஅந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம் என்ற போதைப்பொருள். இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார்,குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம். கசகசா தொடர்பாக புதிய தலைமுறை என்ற தமிழக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியைபாருங்கள். சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள்...

நல்லாட்சியில் அம்பாறை முஸ்லிம்கள் புறக்கணிப்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

Image
சவூதி  அரசாங்கத்தால்  இலங்கைக்கு  அன்பளிப்பு செய்யப் பட்ட  பேரீத்தம் பழம் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு  இன்னும் வழங்கப் படவில்லை என அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள்  சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது . இவ் விடயம்  தொடர்பாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப் , செயலாளர் எம். ஏ.எம். ரஸீன் ஆகியோர் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் , நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு   பேரீத்தம் பழம்  விநியோகிக்கும் நடவடிக்கை புனித நோன்பு ஆரம்ப்பிப்பதற்கு முன்னரே முடிந்து விட்ட நிலையில் முஸ்லிம்கள் நிறைந்து  வாழ்கின்ற   அம்பாறை அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கப் பட்டுள்ளதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. நிறைந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் நிறைந்துள்ள இம்மாவட்டத்தை நல்லாட்சி  அரசும் புறக்கணிக்கிறது என  சம்மேளனத்தின் செயலாளர்    எம். ஏ.எம். ரஸீன் தெரிவித்தார்