நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலைக்குரிய சொந்தக் கட்டிடத்தை விட்டு விட்டு மாற்றார் கட்டிடத்துக்கு போக முடியாது


நற்பிட்டிமுனையில் ஆரம்பிக்கப்படவுள்ள  திவி நெகும வங்கி நடமாடும் சேவைக்கு இனங் காணப்பட்டுள்ள கட்டிடம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டிடம் எனவும் சொந்த கட்டிடத்தை விட்டு விட்டு வேறு கட்டிடத்துக்கு  போக முடியாது என அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபருக்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நற்பிட்டிமுனையில் இரண்டு வருடங்களாக ஆயர்வேத வைத்தியசாலை இயங்கி வருகின்றது. அந்த வைத்தியசாலைக்கு சொந்தமான  கட்டிடத்தை நடமாடும் சேவைக்கு பயன்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதப் பட்டுள்ளது.
அமைச்சரினால் அம்பாறை அரசாங்க அதிபருக்கு எழுதப் பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது. நற்பிட்டிமுனையில் இயங்கும் ஆயூர்வேத வைத்தியசாலை  கடந்த 2014 ஆம் ஆண்டு அம்பாறையில் நடை பெற்ற தெயட்ட கிருள்ள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வைத்தியசாலைக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு ஆயூர் வேத வைத்தியசாலை திறந்து வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் வசிக்கும் வறிய மக்கள் பலரும் நன்மை பெற்று வருகின்றனர்.
இதே வேளை நற்பிட்டிமுனையை சேர்ந்த சமுர்த்தி உதவி பெறும் மக்கள் தங்களின் வங்கி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைக்காக மருதமுனையில் உள்ள வங்கிக்கிக்கு பல அசௌகரியங்களுடன் பண விரயத்துடன் சென்று வருகின்றனர். அம்மக்கள் தங்களின் கஸ்டங்களை தெளிவு  படுத்தி கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் திவி நெகும திணைக்கள அதிகாரிகளிடம் நற்பிட்டிமுனையில் சமுர்த்தி வங்கியொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இவர்களின் நன்மை கருதி திவி நெகும திணைக்களம் நற்பிட்டிமுனையில் நடமாடும் வங்கி சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடமாக ஆயூர்வேத வைத்தியசாலை ஒரு சிலரால் இனங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த ஆயூர்வேத வைத்தியசாலையை வேறு கட்டிடம் ஒன்றுக்கு மாற்றும் முயற்சி இடம் பெறுகிறது. குறித்த கட்டிடம் ஆயூர்வேத வைத்தியசாலைக்கு சொந்தமானதாகும் .  அதனை விட்டு விட்டு வங்கி நடமாடும் சேவைக்கு வேறு ஒரு இடத்தினை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபர் மாவட்ட திவிநெகும பணிப்பாளரிடம் அறிக்கை கோரியூள்ளதாகவூம் ஆயுர் வேத வைத்தியசாலை அவ்விடத்தில் தொடர்ந்து இயங்கினால்  வங்கி நடமாடும் சேவையை விட வைத்தியசாலை முக்கியமானது என்று   அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப் பட்டதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் இணைப்பு செயலாளர் தெரிவித்தார் .  

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்