.மண்டூருக்கு பஸ் சேவை சவளக்கடை ஊடாக ஆரம்பம்! ஹலீம் நடவடிக்கை!!

(எம்.எம்.ஜபீர்)
கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் சேவைகள் இன்று(8)தொடக்கம் சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த காலங்களில் இச்சேவையானது சவளக்கடை உப தபால் அலுவலக சந்தியூடாகவே இடம்பெற்று வந்தது. அதன் காரணமாக 15ஆம் கிராமம், அன்னமலை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை பெறுவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். 
கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய யுத்தத்தின் காரணமாக வர்த்தக கேந்திர நிலையமாக காணப்பட்ட சவளக்கடை பிரதேசம் முற்றாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக  கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவை சவளக்கடை உப தபால் அலுவலக சந்தியூடாகவே இடம்பெற்று வந்தது. 

யுத்தம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் கடந்த மூன்று வருடங்களாக இப்பிரதேசத்தில் மக்களின் குடியிருப்புக்களும், வர்த்தக நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டு சவளக்கடை பிரதேசம் பழைய நிலைக்கு வந்துள்ளதன் காரணமாக பொதுமக்களும் வர்த்தகர்களும் கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை  சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக மீண்டும் ஆரம்பிக்குமாறு நீண்ட காலமாக பல அரசியல்வாதிகளிடமும், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டும் இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனையடுத்து பொதுமக்களும், வர்த்தகர்களும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஸாத்  பதியுதீனின்; இணைப்பாளரும், கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான  சி.எம்.ஹலீமின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து  அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக தற்போது  கல்முனை இலங்கை போக்குவரத்து சபை பொறுப்பதிகாரியினால் கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையினை சவளக்கடை சந்தியூடாக நடாத்துவற்கு அனுமதி வழங்கப்பட்டு பஸ் சேவை இடம்பெறுகின்றது.

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஸாத்  பதியுதீனின்; இணைப்பாளரும், கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான  சி.எம்.ஹலீமின் கவனத்திற்கு கொண்டு வந்து இரண்டு தினங்களில் பஸ் சேவையை பெற்றுத்  தந்தமைக்கு   கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஸாத் பதியுதீனிக்கும், கட்சியின் தலைமைக்கும், இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் பொதுமக்களும், வர்த்தகர்களும் நன்றிகளை தெரிவிக்கின்றனர்

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்