தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சென்ற கிழக்குமாகாண கல்வியியலாளர்கள்
உலகவங்கியின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்திலிருந்து 30 உயரதிகாரிகள் கொண்ட கல்வியியலாளர் குழுவொன்று தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இருவாரகால விஜயம் மேற்கொண்டுகடந்த சனிக்கிழமை இரவு பயணமானது.
கிழக்குமாகாண பிரதம செயலாளர் அபேகுணவர்த்தன, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அசங்கஅபேவர்த்தன, கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் உள்ளிட்ட இக்குழுவில் தெரிவுசெய்யப்பட்ட மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர்கள் கல்வித்திணைக்களத்தில் பணியாற்றும்நான்கு பொறியியலாளர்கள் பிரதம கணக்காளர் உள்ளிட்ட 30பேர் இக்குழுவில் அடங்குகின்றனர்
பாடசாலை முகாமைத்துவம் மற்றும் பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி தொடர்பாக இக்குழுவினர் அந்நாட்டிலிருக்கக்கூடிய நல்ல அம்சங்களை நேரடியாக கண்டு அறியவுள்ளனர். இவ்வம்சங்களை கிழக்கில் அறிமுகப்படுத்தி கல்விஅபிவிருத்தியை மேற்கொள்வது இவ்விஜயத்தின் நோக்கமாகவுள்ளது.
12ஆம் திகதி ஆரம்பமான இவர்களது வெளிநாட்டு பயணம் 26ஆம் திகதி நிறைவடையும்.
கல்முனை கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் பொறியியலாளர் ஜி.அருண் ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கல்முனை கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் பொறியியலாளர் ஜி.அருண் ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment