Posts

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் ஸ்தாபக உறுப்பினரான அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா “நினைதல்” நிகழ்வு

Image
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் ஸ்தாபக உறுப்பினரான அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா ( ஓய்வுநிலை ஆங்கிலபாட உதவிக்கல்விப் பணிப்பாளர் ) அவர்களுக்கான “நினைதல்” நிகழ்வு இன்று  27.10.2015 செவ்வாய்க்கிழமை பி.ப.3மணிக்கு கல்முனை “நால்வர்கோட்டம்” மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பேரவையின் தலைவர் தேசமான்ய ஜலீல் ஜீ தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் குடும்ப உறவுகள் பேரவையினர் இலக்கிய அபிமானிகள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உபதலைவர் பரதன்கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்துவார். நினைவுப்பேருரைகளை கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் செ.யோகராசா எழுத்தாளர் ஏ.ஏ.கபூர் கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வி.பிரபாகரன் எழுத்தாளர் கலாபூசணம் எஸ்.அரசரெத்தினம் ஆகியோர் நிகழ்த்துவர். நினைவுப்பாவை கவிதாயினி சிசிலியாவும் நினைவுக்கவியை கவிதாயினி கலைமகள் ஹிதாயாவும் நிகழ்த்துவர். அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் வெளியீட்டுப்பிரிவு தயாரித்த “ கமலதீபம்” நினைவுமலர் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. வெளியீட்டுப்பிரிவின் சார்பில் கவிப்புனல் அசீஸ் சேமந...

லகானின் இரத்ததான முகாம்

Image
(முர்சித் அனிபா) கிழக்கின் முன்னணி விளையாட்டுக்கழகமான நிந்தவூர்  லகான் விளையாட்டுக்கழகம்  ஏட்பாடு செய்த வருடாந்த  இரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம் பெற்றது .   இந் நிகழ்விற்கு  சுகாதாரப் பிரதி அமைச்சர்    பைசால் காசீம்   பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். அத்தோடு  நிந்தவூர் தள வைத்தியசாலை  மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை வைத்தியர்கள், ஊழியர்கள்,  லகான் விளையாட்டுக்கழக  நிர்வாகிகள் மற்றும் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இனைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்வில்  சுமார் 100க்கு மேற்பட்ட இளைஞர் யுவததிகள் இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது

33 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பேசும் செய்தியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

Image
யு.எம்.இஸ்ஹாக்  33 வருடங்களுக்குப் பின்னர்  இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பேசும் செய்தியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடை பெற்றது .  ”நவீன தொழிநுட்ப முறையிலான செய்தி வழங்கல்” தொடர்பான ஒரு நாள் செயலமர்வு இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன ஒன்று கூடல் மண்டபத்தில் சமீபத்தில்  நடைபெற்றது.  ரூபாவாஹினிக் கூட்டுத்தாபான செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் யூ.எல்.யாகூப் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்  பிரதம அதிதியாக  ரூபாவாஹினிக் கூட்டுத்தாபான செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பணிப்பாளர்  சேர்லி  அணில் டி  சில்வா கலந்து கொண்டு உரையாற்றினார்  தகவல் தொழிநுட்ப முகாமையாளர் சமந்த ஜெயதீர எப்.ரீ.வி முறையினாலான செய்தி வழங்கல் எனும் தலைப்பிலும் செய்தி சேகரித்தலில் கமராவின் பாவனை எனும் தலைமைப்பில் பியல் ரன்ஜித்தும் விசேட விரிவுரையாற்றினர். பிராந்திய செய்தியாளர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் ஆராயப் பட்டு  ரூபாவாஹினிக் கூட்டுத்தாபான செய்திப் பிரிவு மற்றும் நடப...

சிறுவர் தின மாதத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை மாபெரும் மாயாஜால வித்தை

Image
சிறுவர் தின  மாதத்தை முன்னிட்டு  கல்முனை செலான் வங்கி கிளையினால் நடாத்தப் படும்  மாபெரும்  மாயாஜால வித்தையும்  கேளிக்கை விளையாட்டுக்களும்  இடம் பெறவுள்ளதாக  வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாளை  24 ஆம் திகதி சனிக்கிழமை  கல்முனை  ஆசாத் பிளாசா மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப் படவுள்ள  இந்த களியாட்ட  நிகழ்வுக்கு  திக்கிரி (Tikiri ) சேமிப்பு கணக்கில் 1000 ரூபா வைப்பிலிட்டு  இலவச நுழைவு சீட்டை  பெற்றுக் கொள்ளுமாறு கேட்க்கப் பட்டுள்ளது . தகவல்களை பெற விரும்பின்  கல்முனை செலான் வங்கி கிளை  067 2225841 அல்லது 067 2225842 என்னும் தொலைபேசி இலக்கங்களுடம் தொடர்பு கொண்டு  விபரம் தெரிந்து கொள்ளலாம் .  9:23 PM       General  

கல்முனை சாஹிரா மாணவன் சாதனை

Image
( அஸ்ஹர் இப்றாஹிம்) கல்முனை   ஸாஹிரா   தேசியக்கல்லூரியில்   உயர்தர தொழில்நுட்ப   பிரிவில்     கல்வி   பயிலும் மாணவனொருவர்   குறைந்த   மின்சாரத்தில்   இயங்கும் சூழலுக்கு   கழிவாக   அகற்றப்படும்   பொருட்களை பயன்படுத்தி   மிக்குறைந்த   செலவில்   மா   அரிக்கும் இயந்திரமொன்றை    கண்டு   பிடித்து   சாதனை படைத்துள்ளார் . சாய்ந்தமருதைச்   சேர்ந்த   ஏ . எம் . எம் . சௌபாத்   என்ற மாணவன்   புத்தாக்கம்   மூலம்    ஏதாவது பிரயோசனப்படுத்தக்   கூடிய   இயந்திரம்   ஒன்றை உருவாக்க   வேண்டும்   என   தனக்குள்   உதித்த யோசனையின்   அடிப்படையில்   தனது   வகுப்பு நண்பர்களின்   உதவியுடனும்  ,  தொழில்நுட்ப   பிரிவு ஆசிரியர்களின்   வழிகாட்டுதலிலும்   சூழலுக்கு   கழிவாக வீசப்படும்   பழைய   மரத்துண்டுகள்  ,  ஆணிகள்  , வயர்கள்  ,  பாவித்த   கொ...

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்’ பற்றி தமிழ்க் கூட்டமைப்பு வாய் திறக்காதது ஏன்?

Image
சம்பந்தன் ஐயாவும் கண்டுகொள்வதில்லை- அமைச்சர் றிசாட்  ஜெனீவா உள்ளிட்ட சர்வதேசத்துக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதே தமிழ் மொழியைப் பேசும் வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வாய்திறப்பதில்லையென வாணிப மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புலிகளால் வெளியேற்றப்பட்ட வடபகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறச் செல்லும்போது ‘புத்தளத்து முஸ்லிம் களுக்கு இடமில்லை’ எனக் கூறி அவர்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும், மதவாதிகளும் நடந்துகொள்வதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார். ஜெனீவா பிரேரணை தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா தெரிவுசெய்யப்பட்டதும் நாம் மகிழ்ச்சிய டைந்தோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது பாராளுமன்றத்தில் உள்ள 16 கூட்டமைப்பு உறுப்பினர்களோ ...

கல்முனை வலயக் கல்வி அலுவலக பாவனைக்கு கணணிக்கான பிரிண்டர் வழங்கி வைப்பு

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக பாவனைக்கு கணணி பிரிண்டர்  ஒன்று வர்த்தக  கைத்தொழில்  அமைச்சரின்  இணைப்பாளரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளரும் , நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக  அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான  சீ .எம்.ஹலீம்  அவர்களால்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது . இன்று (22) வியாழக்கிழமை  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு சென்ற  ஹலீம்  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  இடம் பிரிண்டரை கையளித்தார் . இதன் போது நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக  அபிவிருத்தி அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயீஸ்  கலந்து கொண்டார். 

கல்முனையில் செலான் வங்கியின் சிறுவர்களுக்கான மாயாஜால வித்தை

Image
சிறுவர் தின  மாதத்தை முன்னிட்டு  கல்முனை செலான் வங்கி கிளையினால் நடாத்தப் படும்  மாபெரும்  மாயாஜால வித்தையும்  கேளிக்கை விளையாட்டுக்களும்  இடம் பெறவுள்ளதாக  வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும்  24 ஆம் திகதி சனிக்கிழமை  கல்முனை  ஆசாத் பிளாசா மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப் படவுள்ள  இந்த களியாட்ட  நிகழ்வுக்கு  திக்கிரி (Tikiri ) சேமிப்பு கணக்கில் 1000 ரூபா வைப்பிலிட்டு  இலவச நுழைவு சீட்டை  பெற்றுக் கொள்ளுமாறு கேட்க்கப் பட்டுள்ளது . தகவல்களை பெற விரும்பின்  கல்முனை செலான் வங்கி கிளை  067 2225841 அல்லது 067 2225842 என்னும் தொலைபேசி இலக்கங்களுடம் தொடர்பு கொண்டு  விபரம் தெரிந்து கொள்ளலாம் . 

சாய்ந்தமருது சிபான் என்ற வாலிபரை 10 நாட்களாக காணவில்லை

Image
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சாய்ந்தமருது கிராமத்தை சேர்ந்த  28 வயதுடைய  ஏ.பீ.முகம்மது சிபான் என்ற வாலிபர்  கடந்த 10 நாட்களாக காணாமல் போயுள்ளார். சாய்ந்தமருது -03 , 20 C /2 ,அல் - கமறூன்  வீதியில் வசிக்கும் இளைஞரே காணாமல் போயுள்ளதாக  அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரைக் கண்டவர்கள்  0770346222 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு  தகவல் தெரிவிக்குமாறு அவரது உறவினர்கள் பொது மக்களைக் கேட்டுள்ளனர் . 

கிழக்கு மாகாணத்திற்கு தனியான உணவு மாதிரி பரிசோதனை ஆய்வு கூடம் ஒன்றை நிறுவ கலந்துரையாடல்.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) உணவு  மாதிரி பரிசோதனையை துரிதமாக மேற்கொள்வதற்கு வசதியாக கிழக்கு மாகாணத்திற்கு தனியானஉணவு மாதிரி பரிசோதனை ஆய்வு  கூடம் ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து முக்கிய கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் (19-10-2015)திங்கள் கிழமை நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்  கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கே.கருனாகரன, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம்,ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் முன்னாள் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு  உதவிப் பணிப்பாளர் எஸ்.நாகையா,உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு  பிரதம உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.ரி.அபுதாலிப் ஆகியோர் கலந்த கொண்டனர்.  இலங்கையில் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுப்பாதுகாப்பு ஆலோசனை சபையின் செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில்  விஸ்தரிப்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. ஆசியா மன்றத்தின்  உள்ளுர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ...

கல்முனை வலயக் கல்வி அலுவலக வாணிவிழா

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக வாணிவிழா இன்று செவ்வாய்க் கிழமை (20) பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் இடம் பெற்றது . நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  கல்முனை அம்பலத்தடி  ஆலய பிரதம குரு சிவா ஸ்ரீ  ரவி ஜீ  குருக்கள் கலந்து கொண்டு சமய சொற்பொழிவாற்றினார் . பாண்டிருப்பு  மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம் குரு கு.சபாரத்தினம் குருக்களால் வழிபாடுகள் நடத்தப் பட்டன  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ,வெஸ்லி உயர்தர பாடசாலை,இராம கிருஷ்ணமிஷன் மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம் பெற்றதுடன் அவர்களுக்கு பரிசளிப்புக்களும் இடம் பெற்றது. பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார், பீ.எம்.வை அரபாத் கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ,பொறியியலாளர் கீ.அருண்  உட்பட கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், நிருவாக உத்தியோகத்தர் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.ரவீந்திரன் நன்...

வாழ்வின் எழுச்சி சிறுவர் கழகங்களுக்கிடயிலான நாடகப் போட்டியில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவிகள் முதலிடம்

Image
வாழ்வின் எழுச்சி  சிறுவர் கழகங்களுக்கிடயிலான  நாடகப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில்  முதலிடம்  பெற்ற  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவிகள் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் . மாணவிகளான எம்.ரீ.எப் .சம்ரி ,எஸ்.எச்.எப்.சிம்ரா ,ஏ.எப்.அப்சானா ,எஸ்.எப்.சிப்னு ஏ.எப்.பரீஸா , எஸ்.எச்.எப்.ஹீரா,எச்.எப்.ரிஸாபா ,ஏ.எப்.றினா  ஆகிய  மாணவிகளே போட்டியில் பங்குபற்றி  முதலிடம் பெற்றனர் . குறித்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு அண்மையில்  கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில்  நடை பெற்றது . பிரதி அதிபர்  திருமதி எஸ்.ஜே.ஏ.கபூர்  உட்பட ஆசிரியைகளால் பரிசு வழங்கி வைக்கப் பட்டது . அதே வேளை  குறித்த மாணவிகளை பாராட்டி  விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  பரிசு சான்றிதழ்  வழங்கி கௌரவித்த நிகழ்வும் அண்மையில் இடம் பெற்றது