வாழ்வின் எழுச்சி சிறுவர் கழகங்களுக்கிடயிலான நாடகப் போட்டியில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவிகள் முதலிடம்
வாழ்வின் எழுச்சி சிறுவர் கழகங்களுக்கிடயிலான நாடகப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவிகள் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .
மாணவிகளான எம்.ரீ.எப் .சம்ரி ,எஸ்.எச்.எப்.சிம்ரா ,ஏ.எப்.அப்சானா ,எஸ்.எப்.சிப்னு ஏ.எப்.பரீஸா , எஸ்.எச்.எப்.ஹீரா,எச்.எப்.ரிஸாபா ,ஏ.எப்.றினா ஆகிய மாணவிகளே போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்றனர் .
குறித்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் நடை பெற்றது . பிரதி அதிபர் திருமதி எஸ்.ஜே.ஏ.கபூர் உட்பட ஆசிரியைகளால் பரிசு வழங்கி வைக்கப் பட்டது .
அதே வேளை குறித்த மாணவிகளை பாராட்டி விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பரிசு சான்றிதழ் வழங்கி கௌரவித்த நிகழ்வும் அண்மையில் இடம் பெற்றது
Comments
Post a Comment