33 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பேசும் செய்தியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

யு.எம்.இஸ்ஹாக் 

33 வருடங்களுக்குப் பின்னர்  இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பேசும் செய்தியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடை பெற்றது .
 ”நவீன தொழிநுட்ப முறையிலான செய்தி வழங்கல்” தொடர்பான ஒரு நாள் செயலமர்வு இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன ஒன்று கூடல் மண்டபத்தில் சமீபத்தில்  நடைபெற்றது. 
ரூபாவாஹினிக் கூட்டுத்தாபான செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் யூ.எல்.யாகூப் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதம அதிதியாக ரூபாவாஹினிக் கூட்டுத்தாபான செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பணிப்பாளர்  சேர்லி  அணில் டி  சில்வா கலந்து கொண்டு உரையாற்றினார் 
தகவல் தொழிநுட்ப முகாமையாளர் சமந்த ஜெயதீர எப்.ரீ.வி முறையினாலான செய்தி வழங்கல் எனும் தலைப்பிலும் செய்தி சேகரித்தலில் கமராவின் பாவனை எனும் தலைமைப்பில் பியல் ரன்ஜித்தும் விசேட விரிவுரையாற்றினர்.
பிராந்திய செய்தியாளர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் ஆராயப் பட்டு ரூபாவாஹினிக் கூட்டுத்தாபான செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் யூ.எல்.யாகூப் தீர்வுகள்  பெற்றுக் கொடுத்தார் .
நல்லாட்சிக்கு முன்னர் செய்திகளின் தரம்  கேவலமாக இருந்தது  மக்கள் சாபமிட்டார்கள்  ஆனால் எட்டு மாத காலத்துக்குள் எமது செய்தியின் தரம் மாற்றம் கண்டு  மக்களை கவர்ந்துள்ளது.  இதற்கான  பங்களிப்பில் 60 வீதம் பிராந்திய செய்தியாளர்களின் தியாகமே  அந்த வகையில் இந்த அரசாங்கத்தில் ஊடகவியாலாளர்களுக்கு அநீதி இழைக்கப் படமாட்டாது என ரூபாவாஹினிக் கூட்டுத்தாபான செய்திப் பிரிவு மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் யூ.எல்.யாகூப் தெரிவித்தார் 



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்