கல்முனை சாஹிரா மாணவன் சாதனை
( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் உயர்தரதொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும்மாணவனொருவர் குறைந்த மின்சாரத்தில் இயங்கும்சூழலுக்கு கழிவாக அகற்றப்படும் பொருட்களைபயன்படுத்தி மிக்குறைந்த செலவில் மா அரிக்கும்இயந்திரமொன்றை கண்டு பிடித்து சாதனைபடைத்துள்ளார்
.சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.எம்.சௌபாத் என்றமாணவன் புத்தாக்கம் மூலம் ஏதாவதுபிரயோசனப்படுத்தக் கூடிய இயந்திரம் ஒன்றைஉருவாக்க வேண்டும் என தனக்குள் உதித்தயோசனையின் அடிப்படையில் தனது வகுப்புநண்பர்களின் உதவியுடனும் , தொழில்நுட்ப பிரிவுஆசிரியர்களின் வழிகாட்டுதலிலும் சூழலுக்கு கழிவாகவீசப்படும் பழைய மரத்துண்டுகள் , ஆணிகள் ,வயர்கள் , பாவித்த கொம்புயுட்டர் அடிச்சட்டம் ,கம்பிகள் , அங்கர் வெற்றுப் பெட்டி என்பவற்றைபயன்படுத்தி தயாரித்துள்ள இம் மாவிடிக்கும்இயந்திரத்தை powerpack மூலம் மின்சாரத்தை வழங்கிஇயக்குகின்றார்
இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு தனக்கு வெறும்நூறு ரூபாய்களே செலவாகியுள்ளதாக தெரிவித்த இம்மாணவன் எதிர் காலத்தை இந்த முயற்சியினைமேலும் விரிவு படுத்தி உள்ளுர் சந்தைகளில் இதனைவிற்பனைக்கு முன்வைக்கவுள்ளதாகவும் கூறினார்.
இம்மாணவனின் முயற்சியினை இக் கல்லூரியின்அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ,உயர்தர தொழில்நுட்பபிரிவு பகுதித் தலைவர் ஏ.ஆதம்பாவா , பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள்பாராட்டியுள்ளதுடன் இம்மாணவனின் எதிர்காலமுயற்சிகள் வெற்றி பெறவும் ஆசி வழங்கியுள்ளனர்.
கல்லுரியின் உயர்தர தொழில்நுட்ப பிரிவு பகுதித்தலைவர்
ஏ.ஆதம்பாவா கருத்து தெரிவிக்கையில் ,
கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவு 2012 ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் கணிசமானதொகையில் முஸ்லிம் மாணவர்களும் தமிழ்மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.கல்முனைத் தொகுதியில் இக்கல்லுரியில் மட்டுமேஉயர்தர தொழில்நுட்ப பிரிவு மிகவும் வெற்றிகரமாகஇயங்கி வருகின்றது. இதன் முதல் தொகுதிமாணவர்கள் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சக்கும் தோற்றியுள்ளனர்.
இத்துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் புத்தககல்வியுடன் மட்டும் நின்று விடாது புத்தாக்கமுயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாணவன்உட்பட இன்னும் பல மாணவர்களும் தற்போதுபலவிதமான ஆக்க முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இம் மாணவர்களின் முயற்சிக்குதொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்பிக்கும்ஆசிரியர்களும் அதிபரும் பெற்றோரும் பலவழிகளில்உதவி வருகின்றனர். என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment