கல்முனை வலயக் கல்வி அலுவலக பாவனைக்கு கணணிக்கான பிரிண்டர் வழங்கி வைப்பு
கல்முனை வலயக் கல்வி அலுவலக பாவனைக்கு கணணி பிரிண்டர் ஒன்று வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளரும் , நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான சீ .எம்.ஹலீம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
இன்று (22) வியாழக்கிழமை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு சென்ற ஹலீம் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இடம் பிரிண்டரை கையளித்தார் . இதன் போது நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயீஸ் கலந்து கொண்டார்.
Comments
Post a Comment