அமைச்சர் றவூப் ஹக்கீம் போன்றோர், பாராளுமன்றத்திலே அழுகுரலிலே பேசுகிறார்கள். இவர்கள் பஸ்ஸை விட்டுவிட்டு ஏன் கையைக் காட்டுகின்றார்கள்?
-பாராளுமன்றத்தில் அதாவுல்லா ஆற்றிய உரை- பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு வனுஸல்லீ அலா ரஸுலில் கரீம். குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பலரும் பலவிதமாகப் பேசிக்கொள்கின்றார்களே தவிர, எங்களைப் பொறுத்தவரையில் இதனைச் சரியாக விளங்கியவர்கள் அல்லது சரியாகச் செய்யவேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள். மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதற்கு முதலிலே, தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றம் கொண்டுவருவது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு சிறுபான்மை மக்கள் ஒரு நாளுமே உடன்படமுடியாது. சிறுபான்மை மக்களுக்கு இந்த நாட்டிலே ஒரேயொரு தலைமைத்துவம்தான் வேண்டும். இரண்டு தலைவர்களும் அதிகாரங்களை வெவ்வேறு இடங்களில் வைத்துக்கொண்டிருப்பதால், இந்த நாட்டிலுள்ள எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது. ஆகவே, அதற்கு நா...