வாக்களித்த நற்பிட்டிமுனை மக்களுக்கு SLMC துரோகம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கல்முனை மாநகரசபையின் முதல்வராக செயற்பட்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அண்மையில் தான் வகித்த முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் போன்ற பதவியில் இருந்து விலகி அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசியகாங்கிரசில் இணைந்து கொண்டதன் காரணமாக சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகரசபையில் வகித்த உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளது முதல்வராக சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிச் செயலாளருமான நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டார். நிஸாம் காரியப்பர் முதல்வராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மாநகரசபையின் பிரதி முதல்வருக்கான வெற்றிடமும் காணப்பட்டது. கலாநிதி சிராஸ் மீராசாஹிப் விலகிச்சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ள குறித்த உறுப்பினர் வெற்றிடத்துக்கு இதுவரையும் எவரையும் நியமிக்காத நிலையில், தெரிவு வாக்குகள் அடிப்படையில் அடுத்த நிலையில் இருக்கும் நற்பிட்டிமுனையை சேர்ந்த யு.எல்.தௌபீக் என்பவருக்கு வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறன சூழ்நிலையில் குறித்த வெற்றிடத்தை ஸ்ரீ லங்...