கல்முனை அல்-ஹாமியா அறபுக் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா
கல்முனை அல்-ஹாமியா அறபுக் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரியின் மன்னர் பைசல் மண்டபத்தில் இடம்பெற்றது.
அல்-ஹாமியா அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் யூ.எல்.அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட பீடாதிபதி அஷ்-ஷெய்க் ஏ. அலியார் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் தலைவருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஏ.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் கௌரவ அதிதிகளாவும் மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பட்டமளிப்பு விழாவுக்கான மலர் பிரதம அதிதியினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கல்லூரியின் பழைய மாணவர்கள் மூவர் சர்வதேச ரீதியில் கல்லூரிக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் 62 மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது.
Comments
Post a Comment