கல்முனையில் மோட்டார் சைக்கள் களவு, கொழும்பை சேர்ந்த சிங்களவர் கைது

கல்முனையில் மோட்டார் சைக்கள்  களவாடிய  கொழும்பை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை கல்முனை பொலிசார் மோடார் சைகளுடன் கைது செய்துள்ளனர் 

சாய்ந்தமருதை சேர்ந்த ஆதம் பாவா நௌசாத் என்பவருடைய  EP  HE -2587 இலக்க  சிவப்பு நிற ஸ்பிளண்டர்  ரகத்தை சேர்ந்த  மோடார் சைக்கள்  கல்முனை மேடி லேன்ட் தனியார் வைத்திய சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த போது  கடந்த 18 ஆந்  திகதி காணாமல் போனது .இது தொடர்பான முறைப்பாடு கல்முனை பொலிஸ்  நிலையத்தில் உரியவரால் பதியப்பட்டுள்ளது.

இந்த களவு தொடர்பாக கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி கப்பாரின் வழிகாட்டலில் பெருகுற்ற தடுப்பு பொறுப்பதிகாரி போ.ப.சோமகுமார ,சாஜன் முஸ்தபா  ஆகியோர்  சுற்றுலா கடமைக்கு சென்ற வேளை  நேற்று 22 களவாடப்பட்ட  மோடார் சைக்கள் பெரிய நீலாவணை  சுனாமி வீட்டு திட்ட பிரதேசத்தில் வைத்து  கண்டு பிடித்துள்ளனர் . 

இந்த மோட்டார் சைகளை களவாடியதாக சந்தேகிக்கப் படும் விஜய சுந்தர சுசந்த குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் கொழும்பு வெள்ளவத்தை  பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர் . சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவரை இன்று 23 கல்முனை நீதிவான் நீதி மன்ற நீதிபதி அந்தோனி ஜூட்சன் முன்னிலையில் முற்படுத்திய போது  எதிர்வரும் 07.07.2014 திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் .

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்