மெற்றோபொலிடென் கல்லூரியின் புதிய கட்டட திறப்புவிழா

(அகமட் எஸ். முகைடீன்)

மெற்றோபொலிடென் கல்லூரியின் புதிய கட்டடம் வெகு விமர்சையாக நேற்று முந்தினம் திறந்துவைக்கப்பட்டது. அத்தோடு சர்வதேச “எட்ஹட்” நிறுவனத்தின் உயர் டிப்லோமா கற்கை நெறிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றோபொலிடென் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் கல்லூரியின் புதிய அடுக்கு மாடி கட்டடம் மலேசிய நாட்டுத் தூதுவர் அஸ்மி சைனுடீனால்  திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாலைதீவு நாட்டின் துணைத் தூதுவர் கலாநிதி ஹூசைன் நியாஸ் மற்றும் முதல் செயலாளர் அகமட் முஜ்தபா, லண்டன் “எட்ஹட்” நிறுவனத்தின் பிரதிநிதி கலாநிதி ஏன் லதான், லண்டன் பக்கிங்ஹம்செயா பல்கலைக் கழகத்தின் முதன்மை விரிவுரையாளர் அலன் கிழாக், “எட்ஹட்” நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி வினாயகமூர்த்தி ஜனகன், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தயந்த எஸ். விஜேசேகர  மற்றும் மெற்றோபொலிடென் கல்லூரியின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்விற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, சிறுவர் அபிலிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதி வாய்ப்புகளை பார்வையிட்டு வியந்து பாராட்டினார்கள்.




ஐந்து மாடிகளைக் கொண்ட இக்கல்லூரியில் நூலகம், வைபையுடன் கூடிய கணணி ஆய்வுகூடம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய   குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் மாணவர்களுக்கான ஓய்வுநேர பகுதி என்பன போன்ற பல வசதிகளை உள்ளடக்கிய இக்கல்லூரியில் சர்வதேச உயர் டிப்லோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்வதோடு பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் கற்பதற்கான அனைத்து தகுதியினையும் பெறவதோடு கற்கை நெறிகளை பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கான வழிகாட்டல்களை இக்கல்லூரி வழங்குகிறது.   

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது