பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு பயிற்சி வழங்கப்பட்டு சீருடை வழங்கும் நிகழ்வு
கல்முனை பொலிஸ் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு பயிற்சி வழங்கப்பட்டு சீருடை வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இடம் பெற்றது.
நிகழ்வில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பார் தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் கலந்து கொண்டார் .
சீருடைகளை வழங்கிய அனுசரண யாளர்களாக சொர்ணம் நகை மாளிகை உரிமையாளரும் ,ஹட்டன் நெசனல் வங்கி,அமானா வங்கி முகாமையாளரும் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்..
பாடசாலைகளின் அதிபர்கள்,மாணவர்கள் அடங்கலாக பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர் . வீதி ஒழுங்கு பயிற்சி வழங்கப் பட்ட மாணவர்கள் பாடசாலைகள் முன்பாகவுள்ள வீதி கடவைகளில் கடமையாற்றுவர் எனவும் அவர்களுக்கு உதவியாக பொலிசாரும் செயல் படுவர் எனவும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் அங்கு தெரிவித்தார். அனுசரணை யாளர்களுக்கு பொலிசாரினால் நினைவு சின்னங்களும் வழங்கப் பட்டன
Comments
Post a Comment