ஜனாதிபதி முஸ்லிம் அமைச்சர்கள் சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று சனிக்கிழமை பதுளை ஊவா மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த விசேட சந்திப்பு தொடர்பில் நாம் அகிலஇலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுத்தீனை தொடர்பு கொண்டு வினவியபோது
அவர் எமக்கு இப்படி தெரிவித்தார் , இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டில் முஸ்லிம்கள் மிகவும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் வாழ்வது தொடர்பிலும், முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள அச்சசூழ்நிலை தொர்பிலும், இன வெறுப்பு பிரசாரதுக்கு எதிராக சட்டத்தை சட்டவாக்கம் செய்து அமுல்படுத்துவது தொர்பிலும் அண்மைய வன்முறைகள் தொடர்பிலும் அழுத்தமாக ஜனாதிபதிக்கு எடுத்து கூறினோம் .
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன்யிடம் இவை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ,முஸ்லிம் பிரதேசங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அண்மைய வன்முறைகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகுழு ஒன்றை நியமித்து அதன் மூலம் சயாதீன விசாரணைகளை மேற்கொள்ளப் படும் என்றும் கூறினார் .
நாட்டுக்கு தற்போதைய சூழ்நிலையை கருதிக்கொண்டு முஸ்லிம் அமைச்சர்களின் வேண்டுகோளின் பேரில் தர்கா நகர், பேருவளை மற்றும் அளுத்கம உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத தாக்குதலை கண்டித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட இணக்கம் காணப்பட்டது. ஜனாதிபதி இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் எனவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் எம்மிடம் தெரிவித்தார் .
பதுளைள ஊவா மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், பசீர் சேகுதாவூத்ஏ.எச்.எம்.பௌசி, ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்,, பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்துள்ளனர் .
இதில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் டளஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர் .
Comments
Post a Comment