Posts

Showing posts with the label மழை

நாட்டில் மழை வேண்டி பிரார்த்தனை புரியுமாறு பிரதம மந்திரி தி .மு.ஜெயரத்ன வேண்டு கோள்

Image
நாட்டில் கடுமையான  வரட்சி ஆலயங்கள் தோறும் மழை  வேண்டி பிரார்த்தனை புரியுமாறு புத்தசாசன அமைச்சரும் பிரதம மந்திரியுமான தி .மு.ஜெயரத்ன  சகல மத தலைவர்களிடமும் வேண்டு கோள்  விடுத்துள்ளார். இதன் பிரகாரம் இன்று மழை  வேண்டி ஆலயங்கள்  தோறும் மதவழிபாடுகள் இடம் பெறவுள்ளன . கல்முனை பிரதேசத்தின் பிரதான நிகழ்வு கல்முனை குடி முகையதீன் ஜும்மா  பள்ளிவாசலில் நடை பெறவுள்ளது . இதன் போது  பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி   விசேட தொழுகை நடாத்தி பிரார்த்தனை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கிழக்கில் நிலவும் இதே காலநிலை தொடரும்

Image
கிழக்கு மாகாணத் தில் நிலவி வரும் மழையுடன் கூடிய குழப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், வடக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடுமென அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழையானது பிற்பகல் அல்லது இரவு வேளையில் பெய்யும் என்றும், சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடும்காற்று வீசும் என்று குறிப்பிட்டிருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், மின்னல் தாக்கம் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளது.

சீரற்ற காலநிலை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும்?

Image
தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் இந்த சீரற்ற காலநிலை பெரும் மழையாக இந்து சமுத்திரத்திர நாடுகளான தென்னிந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை காலம் முதலில் கேரளாவில் ஆரம்பித்து படிப்படியாக மற்றப் பகுதிகளுக்குப் பரவும் என்றும் வளிமண்டல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதனை அமெரிக்காவின் தேசிய காலநிலை சேவைகள் நிலையமும் ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்தப் பலத்த காற்றுடனான பெருமழை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் காலநிலை வங்காள விரிகுடாவின் ஊடாக கிழக்கு இந்தியாவையும் பாதிக்கும் என்றும் காலநிலை அவதானிகள் எச்சரிக்கை செய்கின்றார்கள். ஏற்கனவே இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் சீரற்ற காலநிலை தற்போது நீடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு தென்கிழக்கே தாழமுக்கம்: வடக்கு, கிழக்கில் மழை

Image
* இரு தினங்கள் மழை தொடரும் சாத்தியம் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அதிக மழை பெய்வதற்கான அறிகுறிகள் உள்ளதென வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேவேளை, வடக்கு,வடமத்தி, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கடும் மழையை எதிர்பார்க்க முடியுமென அவ்வதிகாரி கூறினார். உருவாகியிருக்கும் தாழமுக்கம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சி யாக மழை பெய்யுமெனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங் களிலும் நிலவி வரும் வடக்கு, கிழக்கு பருவப் பெயர்ச்சி காரணமாக நண்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு என தெரிவித்துள்ள அதேவேளை மின்னல் தாக்கங்கள் குறித்து பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென வும் வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அம்பாறையில் அவசர நெல் அறுவடை

Image
அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பெருவெள்ளத்தின் பின்னர் எஞ்சிய விளைந்த வேளாண்மைகளை விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர். வயல் வெளிகள் இன்னமும் ஈரமாகவெ உள்ளன. இதனால் பிரதான வீதிகளிலும், பாடசாலைகளிலும் நெல்லை உலர வைக்கின்றார்கள்.

வெள்ளத்தில் நீராடும் அல்-மிஸ்பாஹ் முன்பள்ளி மாணவர்கள்

Image
கல்முனை அலியார் வீதியில் உள்ள அல்-மிஸ்பாஹ் முன்பள்ளி முன்பாக வீதியில் மழை காரணமாக வெள்ளம் நிரம்பியுள்ளது .இதனால் இப்பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இப்பகுதியல் உள்ள பொது மக்களும் சிரமம் அடைகின்றனர். இதனை பார்வையிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ,எம்.பாரகதுல்லா மாநகர முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வந்ததன் பயனாக உடனடியாக இதனை திருத்தம்  செயுமாறு முதல்வர் அதிகாரிகளை பணித்துள்ளார். 

அம்பாறை மாவட்டத்தில் 115.5 மி.மீற்றர் மழைவீழ்ச்சி

Image
விவசாயிகள் பலர் பாதிப்பு  அம்பாறை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 115.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான மைய கடமை நேர அதிகாரி எம்.ஐ.ஏ.நயீம் தெரிவித்தார். இதேவேளை, இங்கு தொடந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறே காணப்படுவதாகவும், கடல் கொந்தளிப்பாக காணப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இதனால் இடைக்கிடை பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அவதானமாக இருக்கும் படியும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவில் ஐஸ் கட்டி மழை!

Image
நுவரெலியா மாவட்டத்தில் இன்று  காலை ஆலங்கட்டி மழை (ஐஸ் கட்டி மழை)பெய்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்தளவான 3.8 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கையில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலையாக இது கருதப்படுகிறது. இதேவேளை- நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் சில நாட்களுக்கு குளிர் காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு $றியுள்ளது.

மீண்டும் மழை வீதி எங்கும் நீர் தேக்கம்

Image
அம்பாறை மாவட்டத்தில் kadantha பல மணித்தியாலங்களாக பலத்த மழை  பெய்கிறது . இதனால்  சகல் வீதிகளும் நீரில்   மூழ்கி   உள்ளன  . மழை காரண  மாக சாதாரண   தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்  பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; மழை அதிகரிக்கும்

Image
வங்காள விரிகுடாவில் தாழமுக்கும் ஏற்பட்டதனால் இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இலங்கையின் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கத்தினால் நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். அதேவேளை இடைக்கிடை கடுங்காற்று வீசக் கூடுமெனவும் அவ்வதிகாரி கூறினார். தாழமுக்கம் காரணமாக கடலிலும் மழை பெய்வதுடன் கடுங் காற்றும் வீசுவதனால் மீனவர்கள் அவதானத்தடன் கடலுக்குச் செல்லுமாறும் அவ்வதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.