வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; மழை அதிகரிக்கும்
வங்காள விரிகுடாவில் தாழமுக்கும் ஏற்பட்டதனால் இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இலங்கையின் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கத்தினால் நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். அதேவேளை இடைக்கிடை கடுங்காற்று வீசக் கூடுமெனவும் அவ்வதிகாரி கூறினார். தாழமுக்கம் காரணமாக கடலிலும் மழை பெய்வதுடன் கடுங் காற்றும் வீசுவதனால் மீனவர்கள் அவதானத்தடன் கடலுக்குச் செல்லுமாறும் அவ்வதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment