Posts

Showing posts with the label காலநிலை

பலஹத்துறைப் பள்ளிவாசல் மினி சூராவளியால் சேதம்!

Image
கம்பஹ மாவட்டத்தில் உள்ள பலகத்துறை முஸ்லிம் கிராமத்தில் நேற்று (11) செவ்வாய்க் கிழமை வீசிய மினி சூறாவளியால் பெரிய பள்ளிவாசலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.  ஓடுகள் காற்றில் பறந்தன. சீலின், முன் கதவு, யன்னல் மினாரா உச்சியில் அமைந்திருந்த பிறை நட்சத்திரம் எனபவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பெரியபள்ளி மையவாடியையும் கடற்பரப்பையும் பிரிக்க அமைக்கப்பட்டுள்ள தூண்களில் இரண்டு  காற்றின் அகோரத்தில் விழுந்துள்ளதோடு தேங்காய்களும் வீழ்ந்தன. ஊர் மக்கள் உடனடியாக ஒன்று சேரந்து திருத்த வேலைகளை மேற்கொண்டனர்

நாட்டில் மீண்டும் சீரற்ற காலநிலை நிலவலாம்; மீனவர்களை விழிப்புடன் செயற்பட அறிவுறுத்தல்

Image
நாட்டின் வடமேற்குப் பகுதியில் மீண்டும் மழை பெய்வதற்கும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதற்குமான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுடன் தொடர்புடைய கடற்பரப்பும் ஆழ்கடல் பகுதியும் கொந்தளிப்புடன் காணப்படலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மணித்தியாலயத்திற்கு எழுபது கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் அது குறித்து விழிப்புடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழில்ககளில் ஈடுபடுபவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. Bad Weather Warnings SEVERE WEATHER ADVISORY VALID FOR NEXT 2 0  HOURS ISSUED AT 2130 HOURS, 11 th  JUNE 2013. (Issued by Early Warning Centre of the Department of Meteorology) Another rain spell in the South-western parts and windy condition over Sri Lanka and neighbouring sea areas are expected. Showers will occur at times in the Western, Sabaragamuwa, Cen

சூறாவளி ஆபத்து இல்லை!

Image
நேற்று சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் மன்னார் முதல் பொத் துவில் வரை கொழும்பு- காலி ஹம்பாந் தோட்டை ஊடாக கடற்கரையோரத்தில் வீசும் பலத்த காற்று பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினாலும்- தற்போது இலங்கைக்கு சூறாவளி ஆபத்து எதுவும் இல்லையென்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள காலநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் இலங்கையின் தெற்மேற்கு கரையோரப் பிரதேசத்தில் ஆழ்கடலிலோ ஆழம் குறைந்த கடல் பிரதேசத்திலோ மீன்பிடி நடவடிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் ஈடுபடலாகாது என்று சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு விடுத்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காலநிலை ஆரம்பித்திருப்பதனால் தான் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதாகவும் மேல்- சப்ரகமுவ- மத்திய- ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழையும் காற்றும் அடுத்த ஒரு வார காலத்துக்கு நீடிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய மழையின்போது ஒரு சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதுடன்- காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றராக

18 மீனவர்கள் பலி: 36பேரை காணவில்லை

Image
நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 36பேர் காணாமல் போயுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.  இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் களுத்துறை, காலி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை, மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற 37 மீன்பிடிப் படகுகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள மீன்பிடி அமைச்சு, காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் விமானப் படையினரும் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

மஹசென்" சூறாவளி விலகிச் செல்கின்றது!

Image
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த மஹசென் சூறாவளி நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பெய்துவரும் பலத்த மழையினால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு- அம்பாறை- திருகோணமலை- மாத்தளை- கண்டி- நுவரெலியா- புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்துவருகின்றது. கடும் காற்றினால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் வெள்ளநீர் தேங்கி நிற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை - வீரமுனை கிராமத்தில் மினி சூறாவளி

Image
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.  அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளியினால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வீரமுனையின் 30 வீட்டுத்திட்டப் பகுதியிலும் இந்த மினி சூறாவளி வீசியுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.  இந்த மினி சூறாவளி காரணமாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளடன் சில வர்த்தக நிலையங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளன. 

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் மினி சூறாவளி

Image
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் திடீரென வீசிய மினி சூறாவளியால் மாளிகைக்காடு பிரதான வீதியிலுள்ள கடைகள் சேதத்துக்குள்ளானது. இதனால் பிரதான வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான கடை ஒன்றும், கடைகளின் கூரைகள், பெயர்ப் பலகைகள் என்பனவும் சேதமடைந்துள்ளதுடன் வீதியிலுள்ள மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக சீரற்ற காலநிலை மாற்றத்தினால் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கபில நிறத்தத்தியினால் நெற்பயிர்கள் வைக்கோலாக மாற்றம்

Image
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழை வெள்ளத்தைத் தொடர்ந்து சவளக்கடை கமநல சேவை விவசாய கேந்திர நிலையத்தின் கீழுள்ள வேளாண்மைகளில் கபில நிறத்தத்தியின் தாக்கம் அதிகரித்துள்ளது.  இதன்காரணமாக விளைச்சலுக்கு தயாராகவிருந்த வேளாண்மைகள் வைக்கோலாக மாறி வருகின்றது.  கபில நிறத்தத்தியின் தாக்கம் காரணமாக இப்பிரதேசத்திலுள்ள 1500ற்கு மேற்பட்ட ஏக்கர்களில் செய்கையிடப்பட்ட வேளாண்மைகள் சேதத்திற்குள்ளாகியுள்ளது.  இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த கிருமி நாசினிகள் விசுறப்படுகின்ற போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

வானில் இன்று நீல நிலா!

Image
 நோன்மதி தினமான இன்று  இரவு வானில்  தோன்றும் பூரண நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த ஒகஸ்ட் மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. கடந்த ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் முறையும்- இன்று  வெள்ளிக்கிழமை இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது நிலா நீலமாகத் தோற்றமளிக்குமாம். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள் புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும்   என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நீல நிலா 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை நீல நிலா மாலை 6.13 மணிக்குத் தொடங்கி- இரவு 7.28 மணி வரை தோன்றும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என்.ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்.

மாலைவேளைகளில் இடி, மின்னலுடன் கடும் மழை; எச்சரிக்கை

Image
மாலை வேளை களில் மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால், அது குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு காலநிலை அவதான நிலையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி மூவர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையை அண்டிய பகுதிகளில் நாட்டின் அநேகமான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் திறந்தவெளிகள், மரத்தடிகள் என்பவற்றில் இருப்பதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் உபகரணங்கள் பாவிப்பதையும் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த வருடம் மின்னல் தாக்கி 51 பேர் இறந்துள்ளதோடு, கடந்த 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.