Posts

Showing posts with the label காலநிலை

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்வு

Image
வெள்ளம் மற்றும் மண்சிரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 91 மற்றும் காயமடைந்தோர் 72 பேர் ஆகும். களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 6 லட்சத்து 98 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 225 நலன்புரி நிலையங்களில் 25 ஆயிரத்து 245 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மலைக்குள் இருக்கும் சிலைக்கும் கெட்ட காலம்

Image
உலகின் மிகப்பழைமை வாய்ந்த எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்ட பாஹியன்கல மலைக்குகை மண்சரிவு ஏற்பட்டு சரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கையின் வரலாற்று ஆய்வாளர்கள் புவிச்சரிதவியல் மற்றும் கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் அவசர தொடர் ஆய்வுகளை நடத்த ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரம் நாட்டின் பல இடங்களிலும் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் மற்றும் இந்த மலைக்குகையை அடுத்துள்ள மலைப் பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளின் போது பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடல் மட்டத்திலிருந்து 1010 அடி உயரத்திலுள்ள இம்மலைக்குகையும் அண்மித்த மேட்டு நிலப்பகுதிகளும் மண்சரிவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்நிலைமையையடுத்து பாஹியன்கல மலைக்குகை பெளத்த விகாரையில் தங்கியிருந்த 30 பிக்குகள் உட்பட அருகாமையில் வசித்து வந்த 21 குடும்பங்களும் அவ்விடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றப் பட்டனர். இந்நிலைமையை அடுத்து இப்பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் பிரபல தொல்பொருள் வரலாற்றாசிரியர்கள், கட்டட ஆராய்ச்சிகள் நிறுவனம், புவிச்சரிதவியல் திணைக்க

சிறுவர்கள் உள்ளிட்ட 146 பேரை பலி கொண்டது அனர்த்தம் (UPDATE)

Image
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும்சீரற்ற காலநிலை காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை,  சிறுவர்கள் உள்ளிட்ட 146 ஆக அதிகரித்துள்ளதோடு, 112 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.   15 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு   நாட்டின் 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வனர்த்தம் காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களை எதிநோக்கியுள்ளன.     களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்கள் அதிக உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   இவற்றில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது.   நாளை மழை தொடரும் வாய்ப்பு   தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும், தென் மேற்கு பருவப் பெயர்ச்சி காற்று காரணமாக, நாளைய தினம் (29)

ஏழு மாவட்டங்களில் இயற்கை அனர்த்தம் : வெள்ள நிலைமை மேலும் மோசமடையும்

Image
ஏழு மாவட்டங்களில் அனர்த்த நிலை நிலவுகின்றது. இன்று மழை குறைவடைந்திருந்த போதிலும் இரவுவேளையில் கடும் மழை பெய்தால் களனி கங்கையை அடுத்துள்ள கொழும்பு மற்றும் அண்டியுள்ள பிரதேசங்களில் 2016ம் ஆண்டில் ஏற்பட்டதிலும் பார்க்க பெரும் வெள்ளநிலமை ஏற்படக்கூடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. களனி கங்கை , ஜின் கங்கை , நில்வள கங்கை , களுகங்கை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய அனர்த்த நிலை குறித்து பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டு;க்கொண்டுள்ளது. 16ஆயிரத்து 759 குடும்பங்களை சேர்ந்த 61 ஆயிரத்து 315 பேர் , 7 மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனத்தத்தின் காரணமாக பாதிக்கபட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இயற்கை அனர்த்தத்தின் காரணமாக இதுவரையில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காணாமல் போயுள்ளனர். 11 பேர் காயத்திற்குள்ளாகியுள்ளனர். இரத்தினபுரி மாத்தறை காலி ஹம்பாந்தோட்டை கம்பஹா மற்றும் கேகாலை அகிய மாவட்டங்களிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இருப்பிடங்களை இழந்துள்ளோரின் எண்ணிக்கை 53ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்பொழு

அரசாங்க தகவல் திணைக்களம் 24 மணித்தியாலங்களும் இயங்கும்

Image
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்க தகவல் திணைக்களம் 24 மணித்தியாலங்களும் இயங்கும் தகவல் நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, மீட்புப் பணிகளிலும் ஈடபட்டு வருகிறார்கள். தற்சமயம் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையில் இருந்து மக்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலான பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். நிவாரண பொருட்களை பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அலுவலகங்களில் கையளிக்கலாம்.

அம்பாறை மாவட்டத்தில் வரட்சி

Image
அம்பாறை மாவட்டத்தில்  நிலவுகின்ற வெப்பமான காலநிலையினால் நீர்த்தட்டுப்பாடு நிலவுவதுடன் கால்நடை பண்ணையிலிருந்து பெறப்படுகின்ற பாலின் அளவு ஜம்பது வீதமாக குறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக மழைவீழ்ச்சி கிடைக்காததன் காரணத்தால் கால்நடை பிரதேசமான வட்டமடு, சாகாமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் புற்கள் வறண்டு பாலைவனமாக காட்சி தருகின்றன. மலைப்பிரதேச காடுகள் வரண்டு காணப்படுவதால் வன ஜீவராசிகள், நீர், உணவு தேடி பல திசைகளிலும் அலைந்து திரிகின்றன. காட்டு யானைகள் வயல் பிரதேசங்களில் நுழைந்து சிறு ஓடைகளில் உள்ள சொற்ப அளவு நீரை உறுஞ்சிக் குடித்து வருகின்றன இதே வேளை 2016 - 2017ம் ஆண்டுக்கான பெரும்போக செய்கைக்கான ஆரம்ப வேலைகளை மேற்கொள்ள விவசாயிகள் மழையினை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். இம்முறை பெரும் போக நெற்செய்கை அடுத்த மாதம் ஒக்டோபர் இறுதிப் பகுதியிலே இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

Image
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம்(20) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று(19) கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வௌ்ளம், மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களினாலேயே பாதுகாப்பு கருதி இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம் (இன்றைய நிலை)அனர்த்தத்தால் இதுவரை 58 பேர் உயிரிழப்பு

Image
களனி கங்கையின் நீர் மட்டம் 7.6 அடியாக உயர்வடைந்துள்ளதையடுத்து மல்வானை மற்றும் கல்கமுவ வெல்லம்பிட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இன்றைய  தினத்திலும்  காலை களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்திருந்தது. குறிப்பாக மலையக பிரதேசங்களில் பெய்துவரும் மழை நீர் அனைத்தும் களனி கங்கைக்கே ஒன்று சேருவதன் விளைவாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தது என தெரிவிக்கப்படுகிறது . இதனால் களனி , நவகம்புர, வெல்லம்பிட்டி, அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன . அதேவேளை இன்றைய தினம் வரைக்கும் நாட்டில்   ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 240 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழப்புகள் எண்ணிக்கை 58 பேர் வரை அதிகரித்துள்ளன.  மேலும்  134 க்கும் மேற்பட்டோரை  காணவில்லை.  3 இலட்சத்து 6 ஆயிரத்து 773 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வங்காள விரிகுடாவில் நிலவியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாறியுள்ளது.

Image
இந்த சூறாவளி ”Roanu” எனப் பெயரிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறைக்கு 600 கிலோமீற்றர் வடக்கே நிலைகொண்டுள்ள இந்த சூறாவளி, இலங்கைக்கு அப்பால் நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியங்களிலும் எதிர்வரும் சில நாட்களில் காற்றின் வேகம் துரிதமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேல் பிராந்தியத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதுடன், சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழு குரலுடன் தீபம் ஏற்றும் சுனாமி நினைவு கல்முனையில்

Image
யு.எம்.இஸ்ஹாக்  தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று சனிக்கிழமையுடன் 11 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.  2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. சிலருக்கு தங்கச் சுனாமி என வர்ணிக்கப்பட்டாலும் அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை, மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும், வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவுகளை அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் நம்மிடையே உள்ளனர்.  இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளுர் நிறுவனங்களும் அமைப்புகளும் பாதிக்கப்படாத மக்களும் குறிப்பாக அரசாங்கமும்  காட்டிய காருண்யமான சேவைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூரவேண்டும். 11 ஆண்டு நிறைவை நினைவு  கூரும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது. கல்முனை மாமாங்க வித்தியாலய முற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவு  தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்களின் அழு குர

பிலிப்பைன்ஸை தாக்கிய மெலர் புயல்- 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில்

Image
பிலிப்பைன்ஸில் மெலர் புயலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சுமார் 7 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நோக்கி செல்லுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.  நாட்டின் கிழக்குப் பகுதிகளை நேற்று (14) கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய மெலர் புயலின் தாக்கம் அதிகமானதைத் தொடர்ந்து கடும் காற்றுடன் கடும் மழை பெய்வதுடன் கடலலைகள் 13 அடி உயரத்திற்கு எழும்ப வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுழன்று அடிக்கும் சூறைக் காற்றில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுறாவளியின் தாக்கத்தால் மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று வீசி வருவதாகவும், 185 மைல் சுற்றளவிற்கு கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறாவளி நெருங்கி வருவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாகாணங்களில் உள்ள சுமார் ஏழரை லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 உள்நாட்டு விமானச் சேவைகள் நேற்

அனைத்து பாகங்களிலும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி தொடரும்!

Image
வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.  மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகங்களில் இன்னும் அதிகமான மழைவீழ்ச்சி பதியப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மன்னார் அம்பாந்தோட்டை கொழும்பு காலி முதலான கடலோரங்களிலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் காற்றின் வேகம் 70 - 80 கிலோ மீற்றரளவில் வீசக்கூடுமென்பதால் பொதுமக்கள் மீனவர்கள், கடற்துறை சார்ந்தவர்கள் என அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதான நகரங்களின் காலநிலை நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட

விண்பொருள் இலங்கைக்கு அருகில் விழவில்லை?

Image
இலங்கையின் தென் பகுதி கடலில் விழும் என அறிவிக்கப்பட்ட விண் பொருள் கடலில் இன்னும் விழவில்லை என தங்கல்லையிலுள்ள ஆதர் சி கிளார்க் மத்திய நிலைய அவதானிகள் தெரிவித்துள்ளனர்.   இது குறித்து, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வாளர் ஜொனதன் மெக்டொவல், 'தற்போது குறித்த பொருள் விண்வெளியில் இல்லை' என தனது ட்விற்றர் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #WT1190F  debris, if any, should have impacted by now. — Jonathan McDowell (@planet4589)  November 13, 2015   இது குறித்து இலங்கை ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தொடர்ந்தும் அவதானிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மீனவர்கள் அவதானம்

Image
திருகோணமலையிலிருந்து 500 கிலோமீற்றர்களுக்கு அப்பால் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்  தற்போது 250 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.   இதனால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடலில் மீன்பிடி மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.   மேலும், இதன் காரணமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வட,வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யலாம்?

Image
நாட்டின் வட,வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இன்று (07) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது என  அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மேடன் - ஜூலியன் ஏற்றத்தாழ்வுகளால் எதிர்வரும் சில நாட்களுக்கு மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டிருப்பதால் காலநிலை மாற்றம் நிலவலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பிரதான நகரங்களின் காலநிலை நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. அநு

இலங்கைக்கு அருகே தாழமுக்கம் . . . .

Image
அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. இலங்கைக்கு தென் கிழக்கே காற்றமுக்க நிலை ஏற்பட்டுள்ளதால் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு கூடிய மழை வீழ்ச்சி ஏற்படுவதுடன் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100 மி.மீ. அளவு மழை பெய்யக் கூடும். தற்போதைய காற்ற முக்க நிலை வலுவடையும் நிலை ஏற் பட்டால் நாடு முழுவதும் கடும் மழை, வெள்ளம், மண் சரிவு அபாயங்கள் ஏற்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

கல்முனை பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ துரிதப்படுத்தல் வேலைத்திட்டம்

Image
( அப்துல்  அஸீஸ் ) கல்முனை பிரதேசத்தில்  அனர்த்த முகாமைத்துவ  துரிதப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று(03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக இன்று கல்முனை பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இப் பிரதேசம்   தொடர்ந்து பெய்து  வரும் மழை காரணமாக அனர்த்தங்கள் தொடர்பாக எதிநோக்கும் பிரச்சனைகள்,  அதனை தீர்க்க மேற்கொள்ளப்படவிருக்கும் உடனடி  நீண்டகால நடவடிக்கைகள், எதிர்கால முன்னாயத்த நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆரயப்பட்டத்துடன், அதற்கான விஷேட செயலணி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது . கல்முனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ  உத்தியோகத்தர் ஏ.ஆர்.நபாயிஸ்யின் ஒருங்கினைப்பிலும் பிரதேசசெயலா ளர் எம்.எச்.முகமட் கனி தலைமையிலும் இடம்பெற்ற இவ் அமர்வில் கல்முனை மாநகர ஆணையாளர்  ஜெ.லியாக்கத்தலி. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  உத்தியோகத்தர் எ.சி.எ.வாகிர்  உட்பட  பாதுகாப்புப்படை அதிகாரிகள், திணைக்கள பிரதிநிதிகள் என அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அனர்த்தங்களை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் 117

Image
மண்சரிவு, வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்கள், விபத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்கவும் உடனடி உதவியைப் பெறவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை நேற்று அறிமுகம் செய்தது. 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் உடனடியாக உதவியை பெற முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பிரதமர் டி. எம். ஜயரட்ன இந்த அவசர தொலைபேசி இலக்கத்தை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். சுனாமி பேரழிவு ஏற்பட்டு 9 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நோக்குடன் நேற்று களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தேசிய பாதுகாப்பு’ தினம் பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பிரதமர் டி. எம். ஜயரட்ன 117 என்ற இலக்கத்துக்கு முதலாவது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அனர்த்த முகாமைத்துவ அவசர தகவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு பேசினார். நாட்டில் எந்த பகுதியிலும் ஏற்படும் இயற்கை அனர்த்தம் விபத்துக்களை தெரியப்படுத்தியதுடன் அந்நிலையம் உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் தொடர்பு

சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை!

Image
யு.எம்.இஸ்ஹாக்  தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு நாளை 13.12.2013 நடைபெறும் என  அனர்த்த முகாமைத்துவ மத்திய   நிலையம்  அறிவித்துள்ளது . 14  மாவட்டங்களைச் சேர்ந்த கரையோரப்பகுதிகளிலேயே இந்த சுனாமி ஒத்திகை நாளை பிற்பகல்  3.00 மணிக்கு  இடம் பெறவுள்ளது . அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ,  மாவட்ட செயலகங்களில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு  ,  வளி மண்டலவியல் திணைக்களம்  ,  தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இலங்கை தகவல் மையம் என்பன கூட்டாக இணைந்து இந்த சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான    ஒத்திகையை நடத்துகின்றன. 

பொத்துவிலில் மினி சூராவளி – வீடு கடைகள் சேதம்

Image
பொத்துவில் பகுதியில் இன்று (08) மாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சுழல் காற்று மாலை 3.30 தொடக்கம் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். எனினும் சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் சுழல் காற்றினால் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.