பிலிப்பைன்ஸை தாக்கிய மெலர் புயல்- 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில்

பிலிப்பைன்ஸில் மெலர் புயலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சுமார் 7 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நோக்கி செல்லுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
 நாட்டின் கிழக்குப் பகுதிகளை நேற்று (14) கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய மெலர் புயலின் தாக்கம் அதிகமானதைத் தொடர்ந்து கடும் காற்றுடன் கடும் மழை பெய்வதுடன் கடலலைகள் 13 அடி உயரத்திற்கு எழும்ப வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுழன்று அடிக்கும் சூறைக் காற்றில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுறாவளியின் தாக்கத்தால் மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று வீசி வருவதாகவும், 185 மைல் சுற்றளவிற்கு கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி நெருங்கி வருவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாகாணங்களில் உள்ள சுமார் ஏழரை லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 உள்நாட்டு விமானச் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 73 பயணிகள் படகுகளும், நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது