2018 A/L பெறுபேறுகள்; அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர்
2018-வௌியிடப்பட்ட, 2018 கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் அகில இலங்கை ரீதியாக, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தளை சாஹிரா கல்லூரி மாணவன், எம்.ஆர்.எம். ஹக்கீம் கரீம், 3 ஆம் இடத்தை பிடித்துள்ளார். சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன், மொஹிதீன் பாவா ரீஸா மொஹமட், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை, கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் (321,469) பரீட்சை எழுத தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 167,907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, பரீட்சைக்கு தோற்றியோரில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார். உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Biological Science) 1 ஆம் இடம் – கலனி ராஜபக்ஷ, கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை 2 ஆம் இடம் – ரவிந்து ஷஷிக, கொழும்பு டி.எஸ். சேனாந...