Posts

Showing posts from November, 2018

மட். வவுணதீவு சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை

Image
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று (30) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகிய பொலிஸ் கான்ஸ்டபில் இருவரே உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவிலுள்ள பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,  அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே இவ்விரு பொலிசாரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. T56 ரக துப்பாக்கிகளினால் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளனர். குறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்ட...

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஒளி விழா

Image
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) பட்டிருப்பு  மத்திய மகா வித்தியாலயத்தில்  ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி கிறிஸ்தவ ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ” ஒளிவிழா ” பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் நேற்று  புதன் கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லாறு மெதடிஸ்த திருச்சபை கல்லாறு கேசரம் அருட்செல்வி ஜோதினி சீனித்தம்பி , முன்னாள் மண்முனை தென் எருவில்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.திரவியராஜா , ஓய்வுபெற்ற ஆசிரியைகளான ஜயந்தி , சுந்தரி , பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்வி சாரா உத்தியோஸ்தர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கடுகண்ணாவ பொலிஸ் நிலைய பெயர் பலகைக்கு வந்த இவ்வளவு பெரிய சோதனை

Image

ஜனாதிபதி - சபாநாயகர் இடையிலான கலந்துரையாடல் நிறைவு

Image
எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நாளை (30) தனித்தனியாக கலந்துரையாடல் மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.  சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.  தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக இந்த கலந்துரையாடல்கள் நாளை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை அல் -மிஸ்பாஹ் அதிபர் மஹ்மூத் மகளீர் கல்லூரியின் அதிபராக நியமனம்

Image
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் யூ.எல்.எம் அமீன் கல்முனை கமு /கமு /மஹ்மூத் மகளீர் கல்லூரியின்  அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்   கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால்  எதிர்வரும் 2019 ஜனவரி 02ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றும் யூ.எல்.எம் அமீன் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்தை சேந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மஹ்மூத் மகளீர் கல்லூரியின் அதிபர் வெற்றிடத்திற்காக நடத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் சித்தியடைந்தமைக்காக இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

TNA யின் ஆதரவு ஐக்கிய தேசிய முன்னணிக்கு

Image
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.  இன்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து, அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.  அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை பெறக்கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வாறு கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதத்தை மேலே காணலாம்

பெப்ரவரி மாதத்திற்குள் மாணவர்களுக்கான சீருடைத் துணி

Image
2019ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்குறிய சீருடைத் துணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.  பாடாசலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளுக்கான வவுச்சர் வழங்கிய முறைக்குப் பதிலாக துணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்துள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.  சீருடைத் துணிகளுக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் முறையினால் ஆண்டொன்றிற்கு 550 மில்லியன் ரூபா மேலதிக செலவினம் ஏற்படுவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.  அத்துடன் மாணவர்களின் பெற்றோருக்கும் மேலதிக செலவினம் ஒன்றை ஏற்க வேண்டியுள்ளதாக அந்த அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் மாணவர்களுக்கான வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகளை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு கல்வியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

ஜனாதிபதியை சந்திக்கிறார் சபாநாயகர்

Image
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது.

பிரதமரின் செயலாளரின் நிதி அதிகாரத்தை தடுக்கும் பிரேரணை நிறைவேற்றம்

Image
பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.  குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர்.  பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால் இன்று காலை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது.  இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.  அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஆமோதித்து வழிமொழிந்தார்.  கடந்த 14ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைப்படி அமைச்சரவை கலைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.  அதன்படி பாராளுமன்றம் பகிரங்க நிதியின் மீது பூரண கட்டுப்பாட்டை கொண்டிருப்பதால் பிரதமரின் செயலாளருக்கு குடியரசின் நிதியிலிருந்து எந்த செலவினத்தையும் மேற்கொள்வதற்கு...

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய கடற்படை வீரர் கைது

Image
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  த மோர்னிங் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை புகைப்படம் பிடிப்பதற்காக முயற்சித்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய கடற்படை வீரர் கைது

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியல் வௌியிடப்படும்

Image
எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய நபர்களின் பெயர் பட்டியல் வௌியிடப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.  மத்திய வங்கியின் அறிக்கை வௌியிடப்படும் போது எவ்வளவு பேர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை கண்டுகொள்ளலாம் என அவர் மேலும் கூறினார்.  இன்று ஐக்கிய தேசிய கட்சியினால் ஒவ்வொரு இடங்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரம் வௌியானவுடன் அதுவும் நின்றுவிடும் என்று அவர் கூறினார்.  இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன அண்மையில் தெரிவித்தாகவும் லக்ஷமன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக முன்றலில் மாவீரர் தின நினைவேந்தல்

Image
யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2018 ஆண்டுக்கான மாவீரர் தின நினைவேந்தல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) பிற்பகல் 12.30 மணி அளவில் பல்கலைக்கழக முன்றலில் உள்ள தூபியில் நடைபெற்றது.  இந்நிகழ்வினை பல்கலைகழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆரம்பித்து வைத்தார்.  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப் பலரும் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். 

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மனுத் தாக்கல்

Image
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.  மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.  ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படைய உரிமையை மீறி மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம்

Image
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.  ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.  இன்று (27) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ள அமைச்சரவைக் கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை இன்று பகல் 01 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியதுடன், மீண்டும் 29ம் திகதி வரையில் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் நீதவான் நீதிபதிகள் 70 பேருக்கு இடமாற்றம்

Image
வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள் உட்பட நீதிமன்றத்தில் சேவையாற்றும் 70 பேருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இடமாற்றம் வழங்கியுள்ளது.  அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  நாடு பூராகவும் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த இடமாற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முன்வைப்பதற்கு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் மீண்டும் 29 ஆம் திகதி கூடும்

Image
பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.  பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (27) பிற்பகல் 1 மணி அளவில் கூடியது.  பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.  இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்து பாராளுமன்ற அமர்வினை பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் இன்றும் கூடியது - முழு விபரம் இணைப்பு

Image
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது.  பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.  (பின்னிணைப்பு - 1.15 pm)   ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.  இதனடிப்படையில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆசனங்கள் பெரும்பாலும் வெறிச்சேடி காணப்படுகிறது.  (பின்னிணைப்பு - 1.25 pm)   பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று தெரிவித்தார்.  சிறுபான்மை உறுப்பினர் என்ற வகையில் தனக்கு பாராளுமன்றத்திலும் வெளியிலும் தனது பாதுகாப்பு தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இந்த விடயம் தொடர்ப...

இளைஞர் கழகங்கள் செயல் இழந்துள்ளதால் இளைஞர்,யுவதிகள் குழுக்களாக தெருவில் நிற்கின்றனர்.

Image
செஸ்டோ ஸ்ரீலங்காவின் தலைவர் நாபி.எம்.முஸ்னி  (பி.எம்.எம்.ஏ.காதர்)  இளைஞர் சேவைகள் அதிகாரிகள் சிலரின் அசமந்தப் போக்கால் இளைஞர் கழகங்கள் செயல் இழந்துள்ளன இதனால்; இளைஞர்,யுவதிகள் குழுக்களாக தெருவில் நின்று பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள் எனவே இளைஞர்,யுவதிகளை நல்வழிப்படுத்த இளைஞர் சேவைகள் அதிகாரிகள் முன்வர வேண்டும்.என செஸ்டோ ஸ்ரீலங்காவின் தலைவர் நாபி.எம்.முஸ்னி தெரிவித்தார். இம்முறை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும்  மாணவர்களுக்காக தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பு(செஸ்வோ)ஏற்பாடு செய்த கருத்தரங்கு வியாழக்கிழமை(22-11-2018)மருதமுனை சி.சி.எஸ்.கல்லூரியில் நடைபெற்றது. இங்கு தலைமையுரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஆசிரியர்களான எம்.ஏ.சிறாஜூதீன்,ஜே.எம்.நியாஸ்,எம்.பைரூஸ், செஸ்டோ ஸ்ரீலங்காவின் உறுப்பினர்களான எம.ஏ.அப்றார் ஹூசைன்,அல்-ஹாபில் எம்.ஏ.அஸ்ரின் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தக் கருத்தரங்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இங்கு நாபி.எம்.முஸ்னி மேலும் உரையாற்றுகையில் :-இளைஞர்...

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலி

Image
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.  குறித்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.  கொட்டாவ, ருக்மல்கம வீதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயேயாகத்திலேயே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கிராமிய பாலங்களை அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி! கல்முனை கிட்டங்கிப் பாலம் உள்வாங்கப்படுமா?

Image
நாடாளவிய ரீதியில் 250 கிராமிய பாலங்களை அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.  இதற்கென 52 தசம் ஒரு மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க நெதர்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.   கடன் உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கைச்சாத்திட்டுள்ளார்.   தூர பிரதேசங்களிலுள்ள கிராமிங்களுக்கும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை வழங்கும் நோக்குடன் தேசிய வீதிப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது.   இந்த வேலைத்திட்டம் மாகாண சபைகள், சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.   இந்த நிதியிலாவது அம்பாறை மாவட்டத்திலுள்ள கிட்டங்கி பாலம் நிர்மாணிக்கப்படுமா என்ற ஆவலோடு அப்பிரதேச மக்கள் காணப்படுகின்றனர் தான் அங்கீகரித்த கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தை .பிரதமர் மகிந்தராஜபக்ஸ  நிறைவேற்றுவாரா? (அரசாங்க தகவல் திணைக்களம்)

அமைச்சர் வசந்த சேனாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விலகுவாரா?

Image
அமைச்சர் வசந்த சேனாநாயக்க தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.  அண்மையில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த வசந்த சேனாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.  இருப்பினும் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தமை அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.  வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டால் தான் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் அமைச்சர் வசந்த சேனாநாயக்க கலந்து கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின...

2019 தேசிய மீலாத் விழா தர்கா நகரில் நடைபெறும்!

Image
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு  2019ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா களுத்துறை  மாவட்டத்தின் தர்கா நகரில் நடைபெறும் என முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று  (26.11.2018) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.  2018 தேசிய மீலாத் விழா இன்று கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.  அத்துடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல்,  முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்   அஷ்ஷேய்க்   எம்.ஆர்.எம்.மலிக் , இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் எம்.எச்.தார்ஸைத், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் முதன்நிலை செயலாளர் முஹம்மட் ஸாஹிட் ஸுஹைல் உ...

உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது எமது கடமை!

Image
தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர் நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவு கூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது, உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது எமது கடமை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  மாவீரர் தினம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை புராதன கிரேக்கர் காலம் முதல் இன்று உலகில் இடம்பெறும் யுத்த காலங்களின் போதும் அதன் பின்னரும் காண முடியும். விடுதலை வீரர்களை நினைவு கூருவது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமை. இன்றைய மனித நாகரிகத்தின் முக்கியமான ஒரு பண்பாக இது காணப்படுகிறது. முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகளிலும் யுத்தங்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நினைவுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பு வெளியிடப்படும் துர்பாக்கிய நிலைமை இன்று காணப்படுகிறது. யுத்தத்தி...

இடைக்கால தடை உத்தரவை விசாரணை செய்ய 7 நீதிபதிகள் நியமனம்

Image
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த வழக்கை விசாரணை செய்வதற்கு ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.  குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை கடந்த 14 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டது.  பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்நிலையில் டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.  பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் , தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.  குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபத...

NSB வங்கியின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை

Image
NSB வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  த பினேன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் மூன்று இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த அபராதப் பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  முன்னாள் பிரதம நீதியரசரான ஸ்ரீயானி  பண்டார நாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் என்பது குறிப்பிடத்தக்கது.