யாழ். பல்கலைக்கழக முன்றலில் மாவீரர் தின நினைவேந்தல்


யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2018 ஆண்டுக்கான மாவீரர் தின நினைவேந்தல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) பிற்பகல் 12.30 மணி அளவில் பல்கலைக்கழக முன்றலில் உள்ள தூபியில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினை பல்கலைகழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆரம்பித்து வைத்தார். 

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப் பலரும் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். 


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்