பாராளுமன்றம் இன்றும் கூடியது - முழு விபரம் இணைப்பு

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது. 

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். 

(பின்னிணைப்பு - 1.15 pm) 

ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர். 

இதனடிப்படையில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆசனங்கள் பெரும்பாலும் வெறிச்சேடி காணப்படுகிறது. 

(பின்னிணைப்பு - 1.25 pm) 

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று தெரிவித்தார். 

சிறுபான்மை உறுப்பினர் என்ற வகையில் தனக்கு பாராளுமன்றத்திலும் வெளியிலும் தனது பாதுகாப்பு தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தான் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சபாநாயகர் பதில் அளித்தார். 

(பின்னிணைப்பு - 1.40 pm) 

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
(பின்னிணைப்பு - 1.40 pm) 

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும், ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பிலும் நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்பிலும் தமது நிலைப்பாட்டை தெரிவித்தனர். 

(பின்னிணைப்பு - 2.30 pm) 

பாராளுமன்றத்தில் புத்தகம் ஒன்றை வீசி தன்னை தாக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலும் சபாநாயகர் அச்சமின்றி செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

தற்போது எங்களுடைய மாவீரர் தினமாக இருக்கின்ற இந்நேரத்தில் அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அஞ்சலி செலுத்துவதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

(பின்னிணைப்பு - 3.13 pm) 

பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்