NSB வங்கியின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை
NSB வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
த பினேன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அபராதப் பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசரான ஸ்ரீயானி பண்டார நாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment