பாராளுமன்றம் மீண்டும் 29 ஆம் திகதி கூடும்
பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (27) பிற்பகல் 1 மணி அளவில் கூடியது.
பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்து பாராளுமன்ற அமர்வினை பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment