எமது மனச்சாட்சியுடன் நாங்கள் முரண்படவில்லையென்றால் நம்மில் சமாதானம் நிலைத்திருக்கும்
கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் (பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் ) ஒவ்வொரு மனித மனங்களிலும் முரண்பாடுகள் இல்லையென்றால் சமாதானம் தானாக வந்து விடும் எமது மனச்சாட்சியுடன் நாங்கள் முரண்படவில்லையென்றால் நம்மில் சமாதானம் நிலைத்திருக்கும் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார். இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தினால் மருதமுனைனையைச் சேர்ந்த எம்.ஐ.ஏ.பரீட்(பறகத் டெக்ஸ்)ஏ.அப்துல் ஹமீட்(தோழர் இஸ்மாயில்)ஆகியோர் சமூக சேவையின் ஊடாக சமாதானத்திற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக “சமாதான தூதுவர்” விருது வழங்கிய நிகழ்வு செவ்வாய்க்கிழமை(29-03-2016) இரவு மருதமுனையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தின் பிரதம நிறைவேற்றும் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ்.தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அஷ்செய்க் எப்.எம்.அகமதுல் அன்சார் மௌலானாவும் கலந்து கொண்டார். மேலும் அதிதிக...