Posts

Showing posts from November, 2015

தினகரன் செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல் பிரதி அமைச்சர் ஒருவரின் எடு பிடியின் பெயர் பத்திரிகையில் பிரசுரிக்கவில்லையாம்

Image
தினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றும் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீத் என்பவருக்கு பிரதி அமைச்சருடன் செயற்படுகின்ற ஒருவரினால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் சனிக்கிழமை 28 ஆம் திகதி இரவு விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்திருந்த வேளையிலேயே இத்தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதி அமைச்சர் கொழும்பில் கலந்து கொண்ட நிகழ்வில் தானும் கலந்து கொண்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்ட தனது பெயரை பிரசுரிக்கவில்லை என்று கூறியதாகவும் இதற்காக கொழும்பில் வைத்து தன்னை தூக்கவுள்ளதாகவும் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமை புரியும் ஏ.ஆர்.பரீத் ஞாயிற்றுக்கிழமை (29) காலை பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை உள நல மேம்பாட்டுக் கண்காட்சி

Image
(யு.எம்.இஸ்ஹாக்)   கல்முனை  வடக்கு   ஆதார வைத்திய சாலை உள மருத்துவப் பிரிவு ஏற்பாடு செய்த  இரண்டு நாள் உள நல   மேம்பாட்டுக் கண்காட்சி இன்று  ( திங்கட் கிழமை ) ஆரம்பித்து வைக்கப் பட்டது  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்  தலைமையில் நடை பெற்ற  இக் கண்காட்சி நிகழ்வில் கல்முனை நீதிவான் நீதி மன்ற நீதிபதி ஏ.ஜூட்சன்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் . உள நல மருத்துவ நிபுணர் முகம்மட் ஜுரைஜ்  வழி  காட்டலுடன் இடம் பெற்ற நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஏ.அலாவுதீன் , கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்  வீ.மயில்வாகனம்  உட்பட வைத்தியர்களும் ,தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் . முற்றிலும்  இலவசமாக  இக்கண்காட்சியை  பாடசாலை மாணவர்கள் பார்வை இடுவதற்கான வசதிகள் செய்யப் பட்டுள்ளன .

முஸ்லிம் கல்வி சமூக ஆய்வுகள் நிறுவன(MESRO) சாதனையாளர் கௌரவிப்பு

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் முஸ்லிம் கல்வி சமூக ஆய்வுகள் நிறுவனம் (மெஸ்ரோ) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து நடாத்தும் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்முனை வலயத்தில் சித்தியடைந்த சுமார் 214 மாணவர்கள் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட இருப்பதுடன், அம்பாறை மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்கள் விசேடமாக  கெளரவிக்கப்பட இருக்கின்றனர் இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம.எம்..ஹரிஸ் கலந்து சிறப்பிக்க உள்ளார். 

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அடிக்கல் நாட்டு வைபவம்

Image
கிழக்கு மாகாணத்தில் 400 வருடங்களுக்கும் மேற்பட்ட மிகப் பழமைவாய்ந்த மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அடிக்கல் நாட்டு வைபவம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு(27) இடம் பெற்றது. ஆலய நிருவாகிகளும் கிராம மக்களும் இணைந்து மக்களிடம் சேகரிக்கப் பட்ட நிதி உதவி மூலம் முற்று முழுதாக மக்களின் பங்களிப்போடு இவ்வாலயம் புனராவர்ததனம் செய்யப்படவுள்ளது. ஆலய பூசகர் சிவஸ்ரீ மு.கு.சபாரெத்தினம் குருக்கள் தலைமையில் வழிபாடுகளுடன் புனராவர்த்தன அடிக்கல் நாட்டு வைபவம் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் ஆலய நிருவாகிகளும்இ பாண்டிருப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட மற்றும் இந்து ஆலயங்களின் பரிபாலன சபை  அங்கத்தவர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

மீலாத் நபி சாதனையாளர்க்களுக்கு சாம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தால் பாராட்டு

Image
   சகா.தேவா  கல்வியமைச்சு கடந்தவாரம் கொழும்பில் நடாத்திய தேசிய மீலாத்துன்நபி விழாப்  போட்டியில் கிழக்குமாகாணம் சார்பில் கலந்துகொண்டு சாதனை படைத்த சம்மாந்துறைவலய மாணவர் இருவரை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை பாராட்டிக்கௌரவித்தது.  நேற்று சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியமட்டத்தில் சாதனை படைத்த ஆரம்ப பிரிவில் குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியைச்     சேர்ந்த மாணவி எம்.சி.பாத்திமா லுக்னா மற்றும் ஆரம்பநிலை பேச்சுப்போட்டியில் 3ஆம் இடம்பெற்ற சம்மாந்துறை தாருல்உலூம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் எம்.எம்.சகீப் அத்னான் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். வலயக்கல்விபப்ணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல்நஜீம் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்  அகமட் கியாஸ்; ஆகியோர் சாதனையாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர். இருமாணவர்களது பெற்றேர்கள் கற்பித்த ஆசிரியைகள் அதிபர்கள் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் ஹஜ்ஜிமொகமட் உள்ளிட்ட கல்வியியலாளர்கள் கலந்துகொண்...

கல்முனை வடக்கு வைத்திய சாலை உள மருத்துவ கண்காட்சி

Image
(யு.எம்.இஸ்ஹாக்)  கல்முனை  வடக்கு   ஆதார வைத்திய சாலை உள மருத்துவப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள  இரண்டு நாள் உள நல   மேம்பாட்டுக் கண்காட்சி நாளை  ( திங்கட் கிழமை ) நடை பெறவுள்ளது . பிரதேசத்தில் உளநல மேம்பாடு,உளநலப் பிரச்சினைகள் ,சமூக நலன், அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உளநலப்  பிரிவானது  உளநல அறிமுகமும் மேம்பாடும் ,உள  நோய்களில்  சிகிச்சை முறைகளும் மருந்துகளின் தொழில்பாடும் , உளப்  பிரச்சினைகளில்  தளர்வு பயிற்சிகளின் பயன்பாடு ,போதைப் பொருள் பாவனையின் தீங்குகளும் சிகிச்சை முறைகளும் ,உளநோயாளரின்  உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் ,உள  நோயின் சமுக நாணதினைக்  குறைதலும் அறிவூட்டலும் ,பாடசாலை உளசுகாதரம் ,பாரிய உள நோய்கள் ,பால் நிலை வன் முறைகளும் தீர்வுகளும்  என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இருநாள் கண்காட்சி (30,01) நடை பெறவுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் ...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் கிழக்கு மாகாணத்தில் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றது.

Image
கி.மா.சு சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன்.  (பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் ,ஏ.எல்.எம்.சலீம் ) வெளிநாட்டு சுற்றுலாப் பயனிகளின் வருகையினால் கிழக்கு மாகாணத்தில் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றது இதைக்கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாகவே உள்ளது இருந்த போதிலும் இதைக்கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்  என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் தெரிவித்தார்.  டிசம்பர் 1ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி இலங்கை தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு  இன்று சனிக்கிழமை (28-11-2015)காலை 9.30மணி தொடக்கம் பகல் 1.30 மணிவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தி...

கிழக்கில் Knowledge Force கல்வி, தொழில் வழிகாட்டலும் புத்தகக் கண்காட்சியும்

Image
கிழக்குமாகாணத்தில் முதல் முறையாக  Knowledge Force   நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பங்குபற்றுதலுடன்  Knowledge Force   International   நிறுவனத்தின்  மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியையும் நேற்று  ( 27)  சாய்ந்தமருது லீமெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்  பிரதம அதிதியாக கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். கௌரவ அதிதியாக சிரேஷ்ட கட்டிடக்கலை நிபுணர் எம்.ஐ.எம்.இஸ்மாயில்  விசேட அதிதியாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ஆகியோர்  கலந்துகொண்டனர். Knowledge Force   நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்ரத் இஸ்மாயில் கண்காணிப்பிலும் வழிநடத்தலிலும் ஆரம்பமான இந்நிகழ்வில் இலங்கையில் புகழ்பெற்ற புத்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தொழில் வழிகாட்டி அமைப்புக்கள் வங்கிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் தங்களது காட்சிக் கூடங்களையும் வழிகாட்டல் ...

மாணவர்களுக்கான சீருடை வலயக் கல்விப் பணிப்பாளரினால் பதிவு செய்யப்பட்ட புடவைக் கடைகளில் கொள்முதல் செய்ய முடியும்

Image
சீருடைத் துணிகளுக்கு பதிலாக வழங்கப்படவுள்ள பண வவுச்சர்கள் எதிர்வரும் டிச. 1 ஆம் திகதி சகல அதிபர்களுக்கும் கிடைக்கும் விதத்தில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.  450 ரூபா முதல் 1000 ரூபா வரையிலான பண வவுச்சர்களுக்காக கல்வி அமைச்சு 26,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்றும் கூறினார். கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் சீருடைக்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 98 வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தும் கூட்டம் நேற்று (27) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர்கள் பணிப்பாளர்களும் கலந்துகொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை அளித்தனர். இந்தக் கூப்பன் முறை வலயக் கல்விப் பணிப்பாளர்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கல்வி வவுச்சர்கள் அமைச்சினால் வழங்கப்படும் அதன்படி உரிய வலயத்துக்கு வவுச்சர்கள் கொண்டு செல்லும் திகதி வ...

சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர் தின நிகழ்வு

Image
விடுதலைப் புலிகளின் மரணித்த உறுப்பினர்களை நினைவுகூரும் நாளான மாவீரர் தினம், இன்று (27) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.   இன்று (27) யாழ். நல்லூர் கோயிலின் முன்னால் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   இதன்போது, யாழ். நல்லூர் கோயிலின் முன்னால் விளக்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    பிரபாகரனின் மைத்துனரான கே. சிவாஜிலிங்கம், கடந்த புதன்கிழமை (25) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார். மேலும் எந்த தடை வந்தாலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   ஆயினும் குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் குறைவானோரே பங்குபற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     அதன் பின்னர் யாழ். மரியன்னை பேராலயத்திற்கு சென்று அங்கும் மெழுவர்த்தி ஏற்றிஅ ஞ்சலி செலுத்திய அவர்,  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது உரிமை அதனை தடுக்க யாராலும் முடியாது. உய...

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மோட்டார் சைகள் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Image
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழில் சங்கம் தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதாக தெரிவித்து மனித உரிமை ஆணைக் குழுவில் இன்று காலை (27) முறைப்பாடு செய்துள்ளனர். அரசாங்கத்தினால் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மானிய அடிப்படையில் வழங்கப் பட்ட மோட்டார் சைக்கிள் நாட்டில் பல மாவட்டங்களிலும் வழங்கப் பட்ட போதிலும் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப் படாமையை காரணங் காட்டியே இந்த முறைப்பாடு இன்று கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழில் சங்க தலைவர்,செயலாளர் அடங்கிய குழுவினர் இந்த மகஜரை கையளித்ததன் பின்னர் தொழில் சங்க தலைவர் கே.முகம்மட் கபீர் ,  செயலாளர் எஸ்.ஆப்தீன் ஆகியோர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்தனர் . 

மருதமுனை“ஷம்ஸ் 95”பாலர் பாடசாலை மாணவர்களின் மொட்டுக்களின் மகுடம் சிறப்பு நிகழ்ச்சி

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை“ஷம்ஸ் 95”பாலர் பாடசாலை மாணவர்களின் மொட்டுக்களின் மகுடம் சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை(25-11-2015)மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் பாடசாலையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.இல்ஹாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக வர்த்தகர் எம்.ஐ.ஏ.பரீட் கலந்து கொண்டார்.அதிதிகளாக மருதமுனை பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.இங்கு பிரதம அதிதி உரையாற்றுகையில் :-இந்த சிறார்களின் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கின்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாங்கள் சிறுவர்களாக இருக்கின்ற  காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படவில்லை இப்போது எங்கு பார்த்தாலும் சிறப்பான நிகழ்வுகள் நடைபெறுகின்றன இன்றைய சிறார்கள் மிகவும் திறமையுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.இவர்களைப்பார்கின்ற போது மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கின்றது என்றார். இங்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன  மாணவர்களுக்கு பிரதம அதிதி,மற்றும் அதிகள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள்.