பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அடிக்கல் நாட்டு வைபவம்

கிழக்கு மாகாணத்தில் 400 வருடங்களுக்கும் மேற்பட்ட மிகப் பழமைவாய்ந்த மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அடிக்கல் நாட்டு வைபவம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு(27) இடம் பெற்றது.
ஆலய நிருவாகிகளும் கிராம மக்களும் இணைந்து மக்களிடம் சேகரிக்கப் பட்ட நிதி உதவி மூலம் முற்று முழுதாக மக்களின் பங்களிப்போடு இவ்வாலயம் புனராவர்ததனம் செய்யப்படவுள்ளது.
ஆலய பூசகர் சிவஸ்ரீ மு.கு.சபாரெத்தினம் குருக்கள் தலைமையில் வழிபாடுகளுடன் புனராவர்த்தன அடிக்கல் நாட்டு வைபவம் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் ஆலய நிருவாகிகளும்இ பாண்டிருப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட மற்றும் இந்து ஆலயங்களின் பரிபாலன சபை  அங்கத்தவர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.







Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்