கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை உள நல மேம்பாட்டுக் கண்காட்சி
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை உள மருத்துவப் பிரிவு ஏற்பாடு செய்த இரண்டு நாள் உள நல மேம்பாட்டுக் கண்காட்சி இன்று ( திங்கட் கிழமை ) ஆரம்பித்து வைக்கப் பட்டது
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடை பெற்ற இக் கண்காட்சி நிகழ்வில் கல்முனை நீதிவான் நீதி மன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .
உள நல மருத்துவ நிபுணர் முகம்மட் ஜுரைஜ் வழி காட்டலுடன் இடம் பெற்ற நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் , கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் உட்பட வைத்தியர்களும் ,தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் .

முற்றிலும் இலவசமாக இக்கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் பார்வை இடுவதற்கான வசதிகள் செய்யப் பட்டுள்ளன .
Comments
Post a Comment